பக்கம் எண் :

49

     22. கொய்வாள் - அரிவாள். அறைநர் - கரும்பை வெட்டுதலுடையோர்;
அறை - வெட்டுதல்; "அறைக் கரும்பு"
(பொருந. 193)

     23. தீம்பிழி எந்திரம் - இனிய சாற்றை எடுக்கும் கரும்பாலை.
பத்தலென்றது கரும்பின் சாறு விழும் கூனை; அது சாற்றின் மிகுதியால்
வருந்தியது.

     24. இன்றோ அன்றோ: ஓகாரங்கள் அசைநிலை.

     25. தாம் நல்லமன்; மன் ஒழியிசையின்கண் வந்தது.

     27. மாணாமாட்சிய - மாட்சிமைப்படாத தன்மையை யுடையவாயின.
மாண்டன பல - முன்பு மாட்சிபெற்றிருந்தனவாகிய பல பைதிரங்கள்.

     மாண்டன பல ஒருகாலை நல்ல, அளிய எனச்சொல்லி இரங்க,
மாணாமாட்சியவாயின வென்க; உரையாசிரியர் வேறுவிதமாக முடிப்பர்.

     (பி - ம்.) 4, கழிப்பிச். 12. சிறுமதிமானும். 23.பத்தர் வருந்த. (9)

20. நுங்கோ யாரென வினவி னெங்கோ
இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று
கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின்
 5 நெடுஞ்சேர லாதன் வாழ்கவவன் கண்ணி
வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே
 10 கனவினும், ஒன்னார் தேய வோங்கி நடந்து
படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டும்
கடாஅ யானைக் கணநிரை யலற
வியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து
புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீஇ
 15 விரியுளை மாவுங் களிறுந் தேரும்
வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
நெடுமதி னிலைஞாயில்
அம்புடை யாரெயி லுள்ளழித் துண்ட
 20




அடாஅ வடுபகை யட்டுமலர் மார்பன்
எமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும்
பரிசின் மாக்கள் வல்லா ராயினும்
கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன்
மன்னுயி ரழிய யாண்டுபல மாறித்