25 |
தண்ணிய
லெழிலி தலையா தாயினும்
வயிறுபசி கூர வீயலன்
வயிறுமா சிலீயரவ னீன்ற தாயே. |
துறை
- இயன்மொழி வாழ்த்து. வண்ணம் - ஒழுகுவண்ணமும்
சொற்சீர் வண்ணமும். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர்
- அட்டுமலர் மார்பன் (20)
(ப
- ரை)
3. 1முரணியோரையென
விரியும் 'இரண்டாவதனைத்
தலைச்சென்றென்பதற்கு இடத்திலே சென்றென்பது பொருளாக்காது முடிவிலே
சென்றென்பது பொருளாக்கி, அதற்குப் போந்தபொருள் முடிவு செயலாக்கி
அதனொடு முடிக்க.
மேலே
கொடைக்கடனமர்ந்த கோடா நெஞ்சினன் (23) என்று கொடை
கூறுகின்றான் ஈண்டு ஓம்பாது வீசி (16) என்று கொடை கூறியதற்குக்
காத்தற்குச் 2சென்றவிடைக் கொண்டவற்றைக் 3களம்பாடச்
சென்றோர்க்குக்
கொடுக்கும் கொடையென வுரைக்க.
20.
அடா அடுபுகை - ஊர்சுடு புகை. அட்டுமலர் மார்பனென்றது,
பகைவரைக் கொன்று அச்செருக்கானே அகன்ற மார்பனென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'அட்டுமலர்
மார்பன்' என்று பெயராயிற்று.
21.
எமர்க்கும் பிறர்க்குமென நின்றவற்றைக் கொடைக்கடனமர்ந்த
வென்பதனோடு முடித்து, எமர்க்கென்றது தன் பாணராகிய எமர்க்கென்றும்,
பிறர்க்கென்றது தன்பாணரல்லாத பிறர்க்கென்றும் உரைக்க.
21-2.
பரிசின்மாக்கள் யாவராயினும் வல்லாராயினுமெனக் கூட்டிப்
பரிசின்மாக்களென்றதற்கு முன்சொன்ன எமர்க்கும் பிறர்க்கு
மெனப்பட்டாரையே ஆக்கி யாவராயினுமென்றதற்குக் கண்டார் மதிக்கப்படும்
தோற்றமிலராயினுமெனவும், வல்லாராயினுமென்றதற்கு ஒரு கல்வி மாட்டா
ராயினுமெனவும் உரைக்க.
யாவராயினுமென்ற
உம்மை இழிவுசிறப்பு; 4வல்லவராயினுமென்ற உம்மை எதிர்மறை.
நடந்து
(10) கடந்து (13) நிறீஇ (14) வீசி (16) என நின்றவற்றை
நெஞ்சினன் (23) என்னும் முற்றுவினைக் குறிப்பொடு முடிக்க.
26.
வயிறுபசிகூரவீயலனென 5மூன்றாவதும் கொடை கூறியதற்கு, மழை
1பகைவரை
முடிவு செய்து எனப் பொருள் கொள்க; தகரவொற்று
விரிந்திருத்தலின் இவ்வாறு பொருள் கொண்டார். தலைச் சென்று - முடித்து.
இத்தொடர் 'தலைக்கட்டி' என்பது போல நின்றது.
2சென்ற இடை - சென்ற
இடத்தில்.
3களம்பாடச் சென்றவர்
பொருநரும் பாணரும்.
4வன்மையுடையாருக்கும் கொடுப்பான்
என்பது பெறப்படுதலின்
எதிர்மறை உம்மையாயிற்று.
5வீசி (16) எனவும், கொடைக்கடனமர்ந்த
(23) எனவும் இருமுறை
கொடை கூறினமையின் இங்கே மூன்றாவது என்றார்.
|