பக்கம் எண் :

57

     பெய்யா விளைவில்காலைத் தன் 1பரிகரமாயுள்ளார்க்கு அவர்கள்
பசித்து வருந்தாமல் வேண்டும் பொழுதுகளிலே வேண்டுவன கொடுக்குமென்று
ஓர் கொடைநிலையாக வுரைக்க.

     நுங்கோ யாரென வினவின், எங்கோ (1), சேரலாதன், அவன் கண்ணி
வாழ்க (5); அவனியல்பிருக்குமாறு சொல்லின், மற்றோர் தேஎத்து மாறிய
வினையே (7) வெயிற்றுகளனைத்தும் வாய்த்தலறியான் (6); பொய்த்தலறியான்
(9); அட்டுமலர்மார்பன் (20), கொடைக்கடனமர்ந்த கோடாநெஞ்சினன் (23);
கோடையிடத்து எழிலி தலையாதாயினும் (25) வயிறுபசிகூரவீயலன் (26);
ஆதலான், அவனையீன்றதாய் வயிறுவிளங்குவாளாக (27) என வினைமுடிவு
செய்க.

     இதனாற் சொல்லியது அவன்றன் செல்வப் பொலிவு கண்டு நீ
யாருடைய பாணனென்று வினவியாற்கு, யான் இன்னாருடையேனென்று
சொல்லிமுடிக்க, அவன் குணங்கள் இன்ன கூறிப் பின் அவனை வாழ்த்தி,
முடித்தவாறாயிற்று.

     'இருமுந்நீர்' (2) எனவும், 'முரணியோர்' (3) எனவும், 'கடிமிளை' (17)
எனவும், 'நெடுமதில்' (18) எனவும் எழுந்த நான்கடியும் வஞ்சியடி யாகலான்
வஞ்சித்தூக்குமாயிற்று.

     கனவினுமென்பது கூன்.

     (கு - ரை) சேரலாதனாற் சிறப்புப் பெற்ற பாணன் ஒருவன் தன் எதிரே
வந்த பாணன் ஒருவனுக்கு அச்சேரலாதனது பெருமையைக் கூறி வாழ்த்தியதாக
அமைந்தது இச்செய்யுள்.

     1. நும் கோ - உம்முடைய இறைவன். நும் என்றது தன்
சுற்றத்தினரையும் உளப்படுத்தியது. மு. புறநா. 212 : 1.

     2. கடலிடையே உள்ள குறைநிலத்தில்

     3. முரணியோர் - பகைவர்

     4, கடம்பு முதல் தடிந்த - கடம்பினது அடிமரத்தை வெட்டிய
(பதிற். 11: 12 - 4, குறிப்புரை). முன்பு - வலி. எங்கோ (1) நெடுஞ்சேரலாதன்
(5) என்க.

     5.கண்ணி - அடையாள மாலை; இது தலையிற் சூடுவது.

     6-7. மாற்றோர் தேத்துமாறிய வினை வெயில் துகளனைத்தும் வாய்ப்பு
அறியலன் - பகைவரது நாட்டிற் சென்று செய்த போரிற் பின் வாங்குதலை
வெயிற்கதிரிலே தோற்றும் அணுவளவேனும் பொருந்து தலையறியான்;
மேற்கொண்ட வினையை முடித்தல்லது மீளான் என்பது கருத்து. வெயில்
துகள் - சூரியன் கதிரினிடையே தோற்றும் தூசி; இதனைச் சிறுமைக்கு
உவமை கூறுதல் மரபு; "இன்னுழை கதிரின் றுன்னணுப் புரையச், சிறிய வாகப்
பெரியோன்" (திருவா. திருவண்டப். 5 - 6)

     8-9. கண்ணின் உவந்து - கண்ணின் முன்னர் உவப்பை வெளிப்படுத்தி;
நெஞ்சு அவிழ்பு அறியா - உட்கோளை வெளிப்படுத்துதலையறியாத; புறத்தே
மகிழ்வுடையாரைப் போலக் காட்டி அகத்தே பகைப்பாரைச் சுட்டியது.
பொய்ப்பு - பொய்த்தல். தேஎத்தும் : உம்மை உயர்வு சிறப்பு; அரசியல்
அடைவாற் பொய்கூற வேண்டிய செவ்வி


     1பரிகரம் - ஏவலர் முதலிய சுற்றத்தார் : இக்காலத்துப்
பரிகலமென்றுவழங்கும்.