பக்கம் எண் :

52

     நேருமாயினும் அப்பொழுதும் பொய்த்தலறியான் என்றபடி, இக்குணம்
தருமபுத்திரர் செயலால் அறியப்படும்.

     9-10. கனவினும் பொய்ப்பு அறியலன் எனக் கூட்டுக.

     பகைவர் அழியும்படி எழுச்சியோடு எடுத்துச் சென்று.

     11. படியோர் - பகைவர்; இச்சொல் பிரதியோர் என்பதன் திரிபென்பர்.
(அகநா. 22 : 5, உரை); "படியோர்த் தேய்த்த பணிவிலாண்மை" (மலைபடு.
423) என்றவிடத்து வணங்காதார் எனப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.
படியோர்த் தேய்த்தல் களிற்றுக்கு அடை. வடிமணி - வடித்துச் செய்த மணி;
"வடிமணிப் புரவி" (பட்டினப். 232). இரட்டும் - மாறி யொலிக்கும்.

     12. கடாஅ யானை - மதம் மிக்க யானை. அலற என்றமையின் இவை
பகைவர் படையிலுள்ள யானையெனக் கொள்க.

     13. வியலிரும் பரப்பின் - மிக்க பெரிய பரப்பையுடைய. கடந்து -
வஞ்சியாது எதிர் நின்று வென்று.

     14. நிறீஇ - நிறுத்தி.

     15. விரியுளை மா - விரிந்த தலையாட்டத்தையுடைய குதிரை.16.
வயிரியர் - கூத்தர். கண்ணுளர் - சாந்திக் கூத்தர் (சிலப். 5 : 49, அடியார்.).
ஒம்பாது வீசி - தனக்கென்று பாதுகாவாமல் வழங்கி.

     15-6. பரிசிலர்க்கு யானை முதலியன வழங்குதல்: சிறுபாண். 142
- 3, குறிப்புரை.

     17-9. மிக்க காப்பையுடைய காவற்காட்டையும், ஆழமாகிய
அகழியையும், உயர்ந்த புறமதிலையும், நிலையான மதிலுச்சியையும், அம்புக்
கட்டுக்களையுமுடைய அழித்தற்கரிய மதிலை உட்புக்கு அழித்து, கடி -
காவல். குண்டு - ஆழம். எயில் - அரண். ஒப்பு: மதுரைக். 64 - 7; புறநா.
21 : 2 - 6.

     19-20. அடாஅ அடு புகை - சமையல் செய்தலால் உண்டாகாத
ஊர் சுடு புகை. உண்ட மார்பன், புகையையுடைய மார்பன் என்க. எயிலை
அழித்துப் பின்னர் அவ்வெயிற்குள்ளிருந்து உண்ணுதல் ஒரு மரபு (
பதிற்.
58; 6. 7;
பு. வெ. 117; புறத்திரட்டு, 1327). நாட்டைச் சுட்ட புகை மார்பில்
வந்து தவழ்ந்தது (
புறநா. 6 : 21-2)

     22. வல்லாராயினும் - எவ்விதக் கலையிலும் வன்மையில்லாராயினும்
(அகநா. 152 : 19; புறநா. 57 - 1); தமக்கு வேண்டியதைச் சொல்லும்
ஆற்றலிலராயினும் எனலும், தாம் கற்றவற்றை மனங்கொள்ளக் கூற
மாட்டாராயினும் (மலைபடு. 78, ந.) எனலுமாம்.

     23. கொடுத்தலாகிய கடமையை விரும்பிய ஒருபால் கோடாத
நெஞ்சையுடையோன்; நம்மவரென்றும் பிறரென்றும் பாராமையின் கோடா
நெஞ்சினன் என்றார்.

     24. மாறி - நீங்கி.

     25. தண்ணிய இயல்பையுடைய மேகம் பெய்யாமற் போயினும்.

     26. தன்னைச் சார்ந்தார் வயிறு பசி மிகும்படி ஈயாமல் இரான்; பசி
கூர்தல் ஈயாமையின் விளைவு. 24-6. பதிற். 18 : 8 - 12.

     27.அவனைப் பெற்ற தாய் வயிறு குறையின்றி விளங்குவாளாக.

     (பி - ம்) 10. ஒருங்கு நடந்து, ஓங்கு நடந்து 21. எமக்கும் (10)