8.
இதன் பதிகத்து யவனர்ப்பிணித்தென்றது யவனரைப்போருள்
அகப்படுத்தியென்றவாறு.
9.
நெய் தலைப்பெய்து கைபிற்கொளீஇ யென்பதற்கு அக்காலத்துத்
தோற்றாரை நெய்யைத் தலையிற் பெய்து கையைப் பிறகு பிணித்தென்றுரைக்க.
10.
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டென்றது அந்த யவனரைப்
1பின்தண்டமாக அருவிலைநன்கலமும் வயிரமுங்கொண்டென்ற வாறு.
(பதிகம்)
|
மன்னிய
பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசி னுதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மா ணல்லினி யீன்றமகன்
அமைவர லருவி யிமையம் விற்பொறித் |
5 |
திமிழ்கடல்
வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோ னிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபி னாரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ |
10 |
அருவிலை
நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவிறன் மூதூர்த்தந்துபிறர்க் குதவி
அமையார்த் தேய்த்த வணங்குடை நோன்றாள் |
இமையவரம்ப
- னெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார்
பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்:
புண்ணுமிழ்குருதி, மறம்வீங்கு பல்புகழ், பூத்த நெய்தல்,
சான்றோர்மெய்ம்மறை, நிரையவெள்ளம், துயிலின் பாயல், வலம்
படுவியன்பணை, கூந்தல்விறலியர், வளனறுபைதிரம், அட்டுமலர்மார்பன்.
இவை பாட்டின் பதிகம்.
பாடிப்
பெற்ற பரிசில் : உம்பற்காட்டு ஐந்நூறூர் 2பிரமதாயம் கொடுத்து
முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற்பாகம் கொடுத்தான் அக்கோ.
இமைய
வரம்ப னெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்.
(கு
- ரை) 4. இமையம் விற்பொறித்தது:
அகநா. 396
: 17;
புறநா. 39 : 15- -6;
சிலப். 25
: 1 - 2, 118, 28 : 136; மணி.
23:104.
1பின்தண்டம்
- சிறைகொண்டாரை விடுத்தற்பொருட்டுக் கொள்ளும்
திறை.
2பிரமதாயம்
- அந்தணர்களுக்கு விடப்படும் இறையிலி நிலம்;
இத்தொடர் சிலாசாஸனங்களிற் பயின்று வழங்கும்
|