பக்கம் எண் :

54

     5. தமிழகம்: புறநா.168 : 18, சிலப். 3 : 37; மணி. 17 : 62.

     7. ஆரியர் - வடநாட்டரசர். அவரைச் சேரன் வென்ற செய்தி, "ஆரிய
ரலறத்தாக்கி..........வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்"
(அகநா. 396 : 15 - 8)
என்பதனாலும் பெறப்படும். வணக்கி - வணங்கச்செய்து.

     8. வன்சொல் யவனர் : சிலப். 28 : 141, 29: ஊசல்வரி, 3.

     10. அருவிலை நன்கலம்: புறநா.218 : 4, பெருங். 4. 2 : 82.

     11. மூதூர் - தலைநகர். தந்து - கொணர்ந்து.

     10-11. தான் பகைவர்பாற் பெற்றதைப் பரிசிலர்க்கு உதவுதல் மரபு;
பதிற்.
44 : 3. 4, 53 : 1; சிறுபாண். 247 - 8; மதுரைக் 145 - 6, 220 - 24,
மலைபடு.
71 - 2.

     12. அமையார் - தன்பாற் பொருந்தாதோரை. தேய்த்த -
இல்லையாக்கிய. அணங்குடை நோன்றாள் - பகைவருக்கு வருத்தத்தைச்
செய்தலையுடைய வலிய முயற்சி.

                இரண்டாம் பத்து முற்றிற்று

                   மூன்றாம் பத்து

21. சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்
றைந்துடன் போற்றி யவைதுணை யாக
எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை யன்ன சீர்சால் வாய்மொழி
 5 உருகெழு மரபிற் கடவுட் பேணியர்
கொண்ட தீயின் சுடரெழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி
வருநர் வரையார் வார வேண்டி
விருந்துகண் மாறா துணீஇய பாசவர்
 10 ஊனத் தழித்த வானிணக் கொழுங்குறை
குய்யிடு தோறு மானா தார்ப்பக்
கடலொலி கொண்டு செழுநகர் நடுவண்
அடுமை யெழுந்த வடுநெய் யாவுதி
இரண்டுடன் கமழு நாற்றமொடு வானத்து
 15 நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி
ஆர்வளம் பழுனிய வையந்தீர் சிறப்பின்
மாரியங் கள்ளின் போர்வல் யானைப்
போர்ப்புறு முரசங் கறங்க வார்ப்புச் சிறந்து
நன்கலந் தரூஉ மண்படு மார்ப
 20 முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர்
புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக்