|
கல்லுயர்
கடத்திடைக் கதிர்மணி பெறூஉம்
மிதியற் செருப்பிற் பூழியர் கோவே
குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை |
25 |
பல்பயந்
தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு
நீரறன் மருங்கு வழிப்படாப் பாகுடிப்
பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சாச்
சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய
நேருயர் நெடுவரை யயிரைப் பொருந |
30 |
யாண்டுபிழைப்
பறியாது பயமழை சுரந்து
நோயின் மாந்தர்க் கூழி யாக
மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு
கார்மலர் கமழுந் தாழிருங் கூந்தல்
ஒரீஇயின போல விரவுமலர் நின்று |
35 |
திருமுகத்
தலமரும் பெருமதர் மழைக்கண்
அலங்கிய காந்த ளிலங்குநீ ரழுவத்து
வேயுறழ் பணைத்தோ ளிவளோ
டாயிர வெள்ளம் வாழிய பலவே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு. பெயர் - அடுநெய்யாவுதி (13)
(ப
- ரை) 1.
1சொல் - சொல்லிலக்கணஞ் சொல்லும் 2நூல்.
பெயர்-
பொருளிலக்கணஞ் சொல்லும் நூல்; "பெற்ற பெரும்பெயர் பலர்கை யிழீஇய"
(பதிற்.
90 : 23)
என இத்தொகையுள் மேலே வந்தமையால், பெயரென்பது
பொருளாம். நாட்டம் - சோதிடநூல். கேள்வி - வேதம். நெஞ்ச மென்றது
இந்திரியங்களின் வழியோடாது 3உடங்கிய தூய நெஞ்சினை.
3.
எவ்வம் சூழாமை - உயிர்வருத்தம் சூழாமை; சூழாமலெனத் திரிக்க.
4.
4காலை அன்ன வாய்மொழி - ஆதித்தனைப்போல எஞ்ஞான்றும்
தப்பாதாகிய மெய்ம்மொழி : மொழியானென ஆனுருபு விரிக்க; ஒடு
விரிப்பினும் அமையும்.
துணையாகக்
(2) கொண்ட (6) என முடிக்க.
1இங்கே
கூறிய சொல்முதலியவற்றிற்கு வேதத்துக்கு உபகாரப்படும்
சாத்திரங்களென்று பொருளுரைப்பின் சிறக்கும். சொல் என்பதை வேதச்
சொற்களுக்கு இலக்கணங் கூறும் பிராதிசாக்கியம் முதலியனவாகவும், பெயர்
என்பதை அவற்றிற்குப் பொருள்கூறும் நிருத்தம் என்பதாகவும் கொள்ளலாகும்.
2நூல்
- இலக்கணம்.
3உடங்கிய
- உள்ளே அடங்கிய.
4காலை
: ஆகுபெயர்.
|