7.
விருப்புமெய் யென்னும் 1ஒற்று மெலிந்தது; 'மைபரந்த' என்பது
பாடமாயின் மைபோலப் பரந்தவென்க.
9.
பாசவர் - ஆட்டுவாணிகர்.
10.
ஊனம் - இறைச்சி கொத்தும் 2அடை குறடு.
கடலொலிகொண்டு
(12) ஆர்ப்ப (11) எனக் கூட்டி ஆர்ப்ப எழுந்த (13)
எனமுடிக்க; இனி, 'கடலொலிகொண்ட' என்பது பாடமாயின் கடலொலிகொண்ட
நகரென்க.
13.
அடுநெய்யாவுதியென்றது அடுசில்நெய்யாகிய ஆவுதியென்றவாறு;
அடுநெய்யை ஆவுதியென்றது விருந்து புறந்தருதலையும் ஒரு வேள்வியாக்கி
3ஆள்வினை வேள்வியென்று ஒரு துறையாக நூலுட் கூறலானென்பது.
இச்சிறப்பானே
இதற்கு,
'அடுநெய்யாவுதி' என்று
பெயராயிற்று.
7-13.
ஆவுதியென்ற இரண்டனையும் அவற்றானாய புகைமேற் கொள்க.
14.
நாற்ற மொடென்பதனை நாற்றத்தானெனக் கொள்க.
15.
கடவுளும் விழைதகவென்றது கடவுளரும் இவ்வாறு நாம் அறஞ்
செய்யப்பெறின் அழகிதென்று அதுவிரும்ப வென்றவாறு.. பேணியென்றது
முன்சொன்ன வேள்வியால் தேவர்களையும் பின்பு அதனோடு ஒப்பித்துச்
சொன்ன ஆள்வினை வேள்வியால் விருந்தாய் வரும் மக்களையும் பேணி
யென்றவாறு; அதனைத் திரித்துப் பேணப் பழுனிய (16) என முடிக்க.
பழுனியவென்பது பெயரெச்ச வினைத்திரிசொல்.
16.
ஆர்வளம் பழுனிய சிறப்பென்றது கொடுக்கக் கொடுக்கக்
குறைபடாத நிறைந்த செல்வத்திலே நின்று பழுத்த சிறப்பென்றவாறு.
17.
கள்ளிற்போர்வல் யானையென்னும் ஒற்று மெலிந்தது.
ஆர்ப்புச்சிறந்து (18) கலந்தரூஉம் மார்ப (19) எனக் கூட்டுக.
19.மண்படு
மார்பவென்றது பகைவர் மண்ணெல்லாம் படுகின்ற
மார்பவென்றவாறு.
பல்லா
பரப்பிக் (21) கதிர்மணி பெறூஉஞ் (22) செருப்பு (23) என
முடிக்க.
23.
செருப்பென்பது ஒருமலை. 4மிதியலென்பது அடை; 4மிதியென்று
செருப்பிற்குப் பேராக்கிச் செருப்பல்லாத செருப்பென்று வெளிப்படுத்தானாக
வுரைக்க. குவியற்கண்ணி (24) என்னும் தொடைநோக்கி மிதியற் செருப்பென
வலிந்தது. மிதியற் செருப்பென்பதற்குப் பிறவாறு சொல்லுவாரும் உளர்.
24.
குவியற்கண்ணியென்றதற்கு வெட்சிமுதல் வாகையீறாயபோர்க்
கண்ணியெல்லாம் குவிதலையுடைய கண்ணியென்க.
26-9.
பரிவேட்பு அஞ்சா அயிரையென்று வெளிப்படை கூறு
1பெரும்
பெயர்’ என்பது நோக்கி மெலிந்தது.
2அடைகுறடு
- அடியில் ஆதாரமாக வைத்துக் கொள்ளும் கட்டை.
3ஆள்வினைன
வேள்வி யென்பதனை ஒரு துறையாகப் புறப்பொருள்
வெண்பாமலையிற்
காணலாம். (215)
4மிதியடியென
இக்காலத்து வழங்கும்.
|