கின்றானாகலின்
அதற்கேற்ப, நீரறன்மருங்கு வழிப்படாவென்று
பெயரெச்சமறையே பாடமாகல் வேண்டும். இனிப் படாதென்று வினையெச்ச
மறையாகிய பாடத்திற்கு நீரற்றவிடத்தில் தான் படாதபடியாலே கொக்கின்
பரிவேட்புக்கு அஞ்சா அயிரையெனவுரைக்க. அயிரையென்பது ஒரு மலை.
நெடுங்கோட்டு
(25) அயிரை(29) என முடிக்க.
31.மாந்தர்க்கு
நோயிலூழியாகவென மாறிக்கூட்டுக; கிடந்தவாறும்
பொருள்படும்.
34.
ஒரீஇயினபோல வென்பதற்குப் பொய்கையென வருவித்துப்
பொய்கையை ஒருவினபோலவென உரைக்க. இனி மேற்சொன்ன கூந்தலை
ஒரீஇயனபோல வென்பாருமுளர். இரவுமலர்நின்றென்பது பொய்கைப்பூப்
போலன்றி இரவுக்காலத்தும் 1மலர்ச்சி நிலைபெற்றென்றவாறு.
ஒரீஇயினபோல
(34) அலமரும் (35) எனக் கூட்டுக.
36.
காந்தளுள்ளவிடத்து எழுந்த மூங்கிலைத் தோளுக்கு உவமை கூறி
அக்காந்தளையும் கைக்கு உவமையாக்குக. நீரழுவம் - நதியென்க.
36-7.
நீரழுவத்து வேயென்றது ஒருநாளும் உடல்வெம்மையாற்
கொதியாது குறிர்ந்தேயிருக்கும் தோளென்றற்கொள்க.
மண்படுமார்ப
(19), பூழியர்கோவே (23), மழவர் மெய்ம்மறை (24),
அயிரைப்பொருந (29), பயமழைசுரந்து (30), மாந்தர்க்கு நோயிலூழி உண்டாக
(31), இவளோடே (37), பலவாயிரம் வெள்ளம் வாழிய (38) எனக்கூட்டி
வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் நாடுகாத்தற்சிறப்புக் கூறி
வாழ்த்தியவாறாயிற்று.
(கு-ரை)
1. பெயர்பொருளென்பதற்கு
மேற்கோள் (முருகு.
269, ந.)
1-2.
கேள்வி - வேதம் (பரி.
2 : 25,
61; பு வெ, 163); சுருதி என்றபடி. உடன் - ஒருங்கே. 3. கொள்கை - விரதம்.
4.
வாய்மைக்குச் சூரியன்: கலித்.
35 : 25;
பரி. 2
: 54.
5.
பேணியர் பேணும்பொருட்டு.
7.
ஆவுதி - ஆகுதியினின்றும் எழும் புகை; ஆகுபெயர்.
1-7.
இதனுள் அரசன் ஓதியவாறும் வேட்டவாறும் காண்க
(தொல்.
புறத். 20, ந.)
8.
பரிசில் பெறவருவார் அளவின்றித் தாமே வாரிக்கொள்ள
வேண்டியும்.
9.
இடம் மாறாமல் விருந்தினர் உண்ணும்பொருட்டும்.
11.
குய் - தாளிப்பு. ஆனாது - அடங்காமல்.
14.
உடன் - ஒருங்கே.
1-15.
சொல் முதலியன துணையாக, கொள்கையினாலும், வாய்
மொழியினாலும் கடவுளைப் பேணும்பொருட்டு எடுத்துக் கொண்ட
வேள்வித் தீயின் ஆவுதியும், வருநர் வாரவேண்டியும் விருந்தினர்
உண்ண வேண்டியும் அழித்த குறை ஆர்ப்ப, மையெழுந்த ஆவுதியும்
கமழும்நாற்றத்ே்தாடுபேணி.
14-5.
தேவர் நாற்றவுணவினரென்று கூறப்படுபவர்
(மதுரைக்.
457-
8; புறநா.
62: 16-7)
1மலர்-மலர்தல்;
முதனிலைத் தொழிற் பெயர்.
|