16-7.
பழுனிய-முதிர்ந்த. மாரிபோன்ற கள்ளினாற் போரில் வல்ல
யானை; "பிரச மாந்திடுங் கடகரி" (கம்ப. நகரப்.
54)
18.
போர்ப்புறு முரசம்-தோல் போர்த்தலையுடைய முரசு; இது யானை
மேலது.
19.
கலம் தரூஉம்-பகைவர் நாட்டிற் பெற்ற அருந்தனங்களைத் தன்
நாட்டிற் கொணரும். மண்படு மார்ப என்றது அனைத்தும் ஒரு பெயராய்ச்
சேரன் என்னும் துணையாய் நின்றது.
1-19.
வேள்விப்புகையும் அடிசிற்புகையும் கமழும்படி கடவுளரையும்
விருந்தினரையும் பேணும்பொருட்டு, பகைவர் நாட்டை வென்று அவர்
பொருளைக் கொணரும் சிறப்புக் கூறப்பட்டது.
20.
கண்ணி - தலையில் அணியும் மாலை; கோவலர்முல்லையை
அணிதல் சாதி இயல்பு. பல்லான்-பலவகைப் பசுக்கள்; "பல்லான் கோவலர்
கண்ணிச், சொல்லுப வன்ன முல்லைமென் முகையே" (குறுந்.
358 : 6 - 7)
21.
புல்லையுடைய மேலான மேய்ச்சற்புலங்களில் பல பசுக்களைப்
பரந்து மேயச்செய்து. மு.
பதிற். 62 : 13.
22.
துறுகற்கள் உயர்ந்த காட்டினிடையே ஒளியையுடைய மணியைப்
பெறுதற்கு இடமாகிய; பெறுபவர் கோவலர்; கடத்திடை மணி பெறுதல்: பதிற்
.66 : 17 - 9.
24.
மழவர் மெய்ம்மறை - மழவர் என்னம் வீரர்களுக்கு கவசம்
போன்றாய்; இது, "சான்றோர் மெய்ம்மறை" (பதிற்.
14 : 12) என்பது
போலநின்றது. மழவர் : ஒருவகை வீரர்; குதிரையையுடையவரென்று தெரிகிறது
(அகநா. 1
: 2)
25.
பயம் - பழம் முதலிய விளைபொருள்கள்; "உழவ ருழாதன நான்கு
பயன்" (புறநா. 109
: 3). பயம் கெழு - நீர்வளம் பொருந்திய. நெடுங்கோடு -
உயர்ந்த சிகரங்களையுடைய; இது பின்வரும் அயிரை மலைக்கு அடை.
26-9.
அயிரையென்பது ஒருவகை மீனுக்கும் பெயராதலின், அதனை
விலக்கி அயிரைமலையென்றும் பொருள்கொள்ளும்பொருட்டுக் கொக்குக்கு
அஞ்சுதலாகிய மீனின் இயல்பை எதிர்மறுக்கின்றார்.
26-7.
நீரற்ற இடத்தின்கட் செல்லாத கூர்மையாகிய பார்வையையுடைய
கொக்கினது, பரிந்த விருப்பத்தை அஞ்சாத. பாகுடி - கூர்மை போலும்.
பார்வல் - பார்வை. பரிவேட்பாவது இரையை விரும்பிக் குத்துதல்.
27-9.
அஞ்சா அயிரை, விலங்கிய அயிரை, நெடுவரை அயிரை எனக்
கூட்டுக.
முனை
கெட விலங்கிய - போர்கெடும்படி தடுத்துநின்ற; முனை:
ஆகுபெயர். நேர் உயர்நெடுவரை - செங்குத்தாக உயர்ந்த பக்கமலையை
உடைய. பொருந - வீரனே.
23-9.
அரசனை மலையைச் சார்த்திப் புகழ்ந்தவாறு (தொல்.
புறத்.
31, ந.)
30. யாண்டு பிழைப்பறியாது - யாண்டு
தோறும் பெய்யாமல் நிற்றலை
அறியாது; ஓர்யாண்டேனும் பொய்த்தலை அறியாதெனலுமாம்.
|