பக்கம் எண் :

59

     31. ஊழி ஆக - நெடுங்காலம் வாழ்வு உண்டாகும்படி.

     32-7. மாதேவியின் சிறப்பு.

     32. மண்ணாவாயின்-எண்ணெய் பூசுதல் முதலியன செய்யாவிடத்தும்:
உம்மை தொக்கது. இயற்கை மணம் உள்ளதென்றபடி.

     33. கார்காலத்து மலரும் முல்லைப்பூ மணக்கின்ற தாழ்ந்த கரிய
கூந்தல். முல்லைப்பூ கற்புக்கு அடையாளம்.

     33-5. கூந்தலினின்றும் நீங்கினவைபோல. மழைக்கண்கள்
கூந்தலினின்று ஒருவின மலரைப் போல இருந்தன. அலமரும் - சுழலும்.

     36-7. அசைகின்ற காந்தள் மலர் விளங்கும் நீரையுடைய நிலத்தில்
முளைத்த மூங்கிலையொத்த தோளையுடைய இவள். இவள் என அண்மைச்
சுட்டாற் குறித்ததனால், இச்செய்யுள் சேரனும் அவன் பெருந்தேவியும்
ஒருங்கிருந்தவழிப் பாடப்பெற்றதாகத் தோற்றுகிறது.

     38. வெள்ளம்-ஒரு பேரெண். ஆயிர வெள்ளம் வாழிய : பதிற்.
63 : 20 - 21.

     30-38. மழை சுரந்து ஊழியாக இவளோடு நீ வாழிய.

     (பி - ம்) 1 - 2. நெஞ்ச, மைந்து. 10. ஊனைத்தழித்த. 12 - 3.
செழுநகர்வரைப்பி, னடுவணெழுந்த. (1)


22. ினனே காமங் கழிகண் ணோட்டம்
அச்சம் பொய்ச்சொ லன்புமிக வுடைமை
தெறல்கடு மையொடு பிறவுமிவ் வுலகத்
தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும்
 5 தீதுசே ணிகந்து நன்றுமிகப் புரிந்து
கடலுங் கானமும் பலபய முதவப்
பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது
மையி லறிவினர் செவ்விதி னடந்துதம்
அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள்
 10 மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய
ஊழி யுய்த்த வுரவோ ரும்பல்
பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச்
சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தற்
கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்
 15 ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த
வேல்கெழு தானை வெருவரு தோன்றல்
உளைப்பொலிந்த மா
இழைப்பொலிந்த களிறு
வம்புபரந்த தேர்