20 |
அமர்க்கெதிர்ந்த
புகன் மறவ ரொடு
துஞ்சமரந் துவன்றிய மலரகன் பறந்தலை
ஓங்குநிலை வாயிற் றூங்குபு தகைத்த
வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின் |
25 |
நெடுமதி
னிரைப்பதணத்
தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த
பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ
போர்த்தெறிந்த பறையாற் புனல்செறுக் குநரும்
நீர்த்தரு பூசலி னம்பழிக்கு நரும் |
30 |
ஒலித்தலை
விழவின் மலியும் யாணர்
நாடுகெழு தண்பணை சீறினை யாதலிற்
குடதிசை மாய்ந்து குணமுதற் றோன்றிப்
பாயிரு ளகற்றும் பயங்கெழு பண்பின்
ஞாயிறு கோடா நன்பக லமயத்துக் |
35 |
கவலை
வெண்ணரி கூஉமுறை பயிற்றிக்
கழல்கட் கூகைக் குழறுகுரற் பாணிக்
கருங்கட் பேய்மகள் வழங்கும்
பெரும்பா ழாகும னளிய தாமே. |
துறை
- வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும்
வஞ்சித் தூக்கும். பெயர் - கயிறுகுறு முகவை (14)
(ப
- ரை)
2. அச்சம்-பகைவர்க்கு அஞ்சுதல். அன்பு - பொருண்
மேலன்பு.
13.
சிரறுசில ஊறியவென்றது பல்லூற்றொழியச் சில்லூற்றாகவூறிய
வென்றவாறு; சிரறுதல் - சிதறுதல்.
14.
கயிறு குறு முகவையென்றது தன்னால் நீர்தாங்குவது
பெரிதன்றித் தன் கயிற்றையே நின்று வாங்கப்படும் முகவையென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு,
கயிறுகுறு முகவை' என்று
பெயராயிற்று.
22.
தூங்குபு என்பதனைத் தூங்கவெனத் திரித்துக் கால வழுவமைதி
யெனக் கொள்க. தகைத்தல் - கட்டுதல்.
23.
வில்விசை மாட்டிய விழுச்சீர் 1ஐயவியென்றது விசையையுடைய
வில்லானும் துளையுருவ எய்யமுடியாது மிக்க கனத்தையுடைய 2ஐயவித்துலா
மென்றவாறு.
116ஆம்
பாட்டில் ஐயவியென்பதற்கு அப்புக்கட்டென்றும்
பொருளெழுதினார்.
2ஐயவித்துலாம்:
சிலப்
15;
213
|