பக்கம் எண் :

63

     24-5. காவலையுடைய காட்டையும் ஆழமாகிய அகழியையும் உலர்ந்த
மதிலையும் மதிலுள் மேடையையும் உடைய.

     26. பெருமையுடைய பெரிய சிகரங்களோடு கூடிய அகப்பாவென்னும்
அரணத்தை எதிர்த்த. அகப்பாவெறிந்தது: பதிற்: 3-ஆம் பதி. 3; நற்.
14 : 3; சிலப். 28 : 144.

     27. மதிற்போர் கூறுதலால் மதில் வளைத்தற்குரிய உழிஞையைக்
கூறினார். பொன்னாற் புனையப்பெற்ற உழிஞை; போர்ப்பூக்களைப் பொன்னாற்
செய்து அணிதலும் மரபு; "பொலம்பூந் தும்பை" (மதுரைக். 737) என்பதையும்
அதன் அடிக்குறிப்பு முதலியவற்றையும் பார்க்க. குட்டுவன் - குட்ட
நாட்டையுடைய சேரன்.

     28. தோலைப் போர்த்து முழக்கிய பறையின் ஒலியால் நீரினது ஒசையை
அடக்குவாரும்; செறுக்குநர் - அடக்குவார்; "மீனிற் செறுக்கும் யாணர்"
(புறநா. 7 : 12)

     29. நீரில் செய்கின்ற விளையாட்டின் ஆரவாரத்தினால் அம்பினாற்
செய்யும் போராரவாரத்தை அழியச் செய்வாரும்; என்றது நீர்விளையாட்டுப்
பூசல் போர்ப்பூசலைவிடப் பெரியதாயிற்றென்றபடி (பரி. 6 : 29; பெருங்.
1. 41 : 20 - 22; சீவக. 2655)

     30. முழக்கத்தைத் தன்னிடத்தே பெற்ற நீர்விழாவின்கண் மிகுதியாக
உள்ள புதுவருவாயையுடைய பெருங்கதையிலுள்ள நீராட்டரவமென்னும் பகுதி
இங்கே அறிதற்குரியது.

     31. தண்பணை- மருதநிலம். நீ கோபித்தாயாதலின்.

     32-8. இனிவரும் கேடு கூறி இரங்கியது.

     32-4. மேற்குத் திசையிலே மறைந்து கிழக்கில் உதயமாகி, பரவிய
இருளை அகற்றும் பயனையுடைய பண்பைப் பெற்ற சூரியன் ஒருபாற் சாயாமல்
நின்ற நடுப்பகற்பொழுதில்.

     34-8. இரவிலே நிகழ்வதற்குரிய செய்திகள் மக்களின்றிப் பாழ்பட்ட
பகைவர் நிலத்தில் நடுப்பகலிலும் நிகழ்ந்தனவென்றார்; "பின் பகலேயன்றியும் பேணா ரகநாட்டு, நன்பகலுங் கூகை நகும்"
(பு, வெ. 39)

     35. கவர்த்த வழிகளில் உள்ள வெள்ளிய நரிகள் கூவுதலை
முறையே செய்ய.

     36-7. பிதுங்கிய கண்களையுடைய கோட்டான்கள் குழறுகின்ற
குரலாகிய தாள இசைக்கு ஏற்பக் கொடிய கண்களையுடைய பேய்மகள்
ஆடுகின்ற. கழல்கட் கூகை : முருகு. 49.

     தண்பணை (31) பெரும்பாழாகும்; தாம் அளிய. மன்: ஒழியிசைப்
பொருளில் வந்தது.

     (பி - ம்) 13. சிரறுசெல. 34. ஞாயிறு கொண்ட. (2)

 

23. அலந்தலை யுன்னத் தங்கவடு பொருந்திச்
சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து
நிலம்பை தற்ற புலங்கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பைய ராங்கண்
 5 மன்றம் போந்து மறுகுசிறை பாடும்