|
வயிரிய
மாக்கள் கடும்பசி நீங்கப்
பொன்செய் புனையிழையொலிப்பப் பெரிதுவந்து
நெஞ்சுமலி யுவகைய ருண்டுமலிந் தாடச்
சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும் |
10 |
போரடு
தானைப் பொலந்தார்க் குட்டுவ
நின்னயந்து வருவேங் கண்டனம் புன்மிக்கு
வழங்குந ரற்றேன மருங்குகெடத் தூர்ந்து
பெருங்கவி னழிந்த வாற்ற வேறுபுணர்ந்
தண்ணன் மரையா வமர்ந்தினி துறையும் |
15 |
விண்ணுயர்
வைப்பின காடா யினநின்
மைந்துமலி பெரும்புக ழறியார் மலைந்த
போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின்
மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைந் ததைந்த காஞ்சியொடு
|
20 |
முருக்குத்தாழ்
பெழிலிய நெருப்புற ழடைகரை
நந்து நாரையொடு செவ்வரி யுகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை
அழன்மருள் பூவின் றாமரை வளைமகள்
குறாஅது மலர்ந்த வாம்பல் |
25 |
அறாஅ
யாணரவ ரகன்றலை நாடே. |
துறை
- வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - ததைந்த காஞ்சி (19)
(ப
- ரை) 1.
அலந்தலையெனல் விகாரம்.
15.
விண்ணுயர் வைப்பின காடென்றது மரங்கள் விண்ணிலே செல்ல
வோங்கி.....................; மாறியுரைப்பாரு முளர்.
19.
ததைந்த காஞ்சியென்றது 1விளையாட்டுமகளிர் பலரும் தளிரும்
முறியும் தாதும் பூவும் கோடலாற் சிதைவுபட்டுக் கிடக்கின்ற
காஞ்சியென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'ததைந்த காஞ்சி'
என்று பெயராயிற்று.
23-4.
வளைமகள் குறாஅது மலர்ந்த ஆம்பலென்றது விளையாட்டு
மகளிர் குறுதற்கு எட்டாமையாலே மலர்ந்த ஆம்பலென்றவாறு.
குறாமலெனத்
திரிக்க.
குட்டுவ
(10), போரெதிர் வேந்தர் தாரழிந்து ஓராலின் (17), அவர்
அகன்றலை நாடு (25) காடாயின (15); அதனை நின்னயந்து வருவேம்
கண்டனம் (11) எனக்கூட்டி வினைமுடிவு செய்க.
1மகளிர்
காஞ்சி கொய்தல்: "கொய்குழை யகைகாஞ்சித் துறையணி
நல்லூர" (கலித்.
74 : 5)
|