இதனாற்
சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.
போரெதிர்வேந்தர்
தாரழிந்து ஓராலின் (17), நாடு (25) காடாயின (15)
என எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறினமையால் 1வஞ்சித்துறைப்
பாடாணாயிற்று.
(கு
- ரை) 1. அலந்தலை = அலந்த தலை-இலையின்றி வறிதாகிய
தலை; "அலந்தலை வேலத்து" (பதிற். 39 : 12).
உன்னம் - இலவென்பர்.
கவடு - கிளை.
2.
சிதடி - சிள்வீடென்னும் வண்டு. வறம் - வறுமை.
3.
பைது-பசுமை. புலங்கெடு காலையும் - விளைநிலங்கள்
விளைவின்றிக் கெட்ட காலத்தும்.
4.
நரம்பை இழுத்துக்கட்டிய யாழ்முதலிய இசைக் கருவிகளைக்
கொண்டபையினை உடையராகி; கலம் - யாழ் முதலிய இசைக்கருவிகள்.
5.
மன்றம் - பரிசிலர் தங்கும் பொது இடம். மறுகு சிறைபாடும்.
சென்று மீளும் பக்கமாகிய இசைத் துறைகளைப் பாடும்; மறுகு சிறையென்றது
ஆரோகண அவரோகணக் கிரமம் போன்ற ஓர் இசை முறைபோலும்.
6.
வயிரிய மாக்கள் - கூத்தரும் பாணரும்; கடும்பசி - மிக்க பசி.
5-6.
பாடுவார் மன்றம் நண்ணிமறுகு சிறை பாடுதல் : பதிற்.
29 : 8 - 9, 43 : 26 - 8.
7.
புனையிழை - அலங்கரிக்கப்பெற்ற ஆபரணம். இது சேரனால்
அணியப் பெற்றது.
8.
உண்டு மலிந்து ஆட-கள்ளையுண்டு மகிழ்ச்சி மிக்கு ஆடுதலைச்
செய்ய. உண்டாட்டு என்னும் சொல் இங்கே அறிதற்குரியது.
9-10.
சிறிய அளவினையுடைய கள்ளுண்டு மகிழ்ச்சிபெற்ற காலத்தும்
பெரிய ஆபரணங்களை வழங்குகின்ற; சிறுசோறு, பெருஞ்சோறு எனபன
போலச் சிறியகள், பெரியகள் என அளவுபற்றிக் கூறுதல் மரபு (புறநா.
235 : 1-2); கள்ளுண்டு மகிழும் மகிழ்ச்சியை, மகிழ் என்று சொல்லுதல்
வழக்காதலின், சிறுமகிழ் என்றது சிறிய கள்ளுண்ட மகிழ்ச்சி என்பதைக்
குறித்தது. கள்ளுண்ட காலத்துப் பெருங்கொடை வழங்குதல் உபகாரிகளுக்கு
இயல்பு. இங்கே சிறுகள்ளுண்டு பெருங்கலம் வீசுதல் இயல்பாகவே அவன்
கொடையிற் சிறந்தவன் என்பதைப் புலப்படுத்தியது. "நாட்கள் ளுண்டு
நாண்மகிழ் மகிழின், யார்க்கு மெளிதே தேரீ தல்லே, தொலையா நல்லிசை
விளங்கு மலையன், மகிழா தீத்த விழையணி நெடுந்தேர், பயன்கெழு
முள்ளூர் மீமிசைப் பட்ட மாரி யுறையினும் பலவே" (புறநா.
123) என்பதும்
அதன் உரை முதலியனவும் இக்கருத்தைத் தெளிவுறுத்தும்.
10.
பொலந்தார் - பொன்னரிமாலை.
1-10.
நிலவளம் அற்ற வறுமைக்காலத்தும் சேரன் பெருங்கொடை
வழங்குவான் என்றபடி.
11.
நின் நயந்து - நின்னைக் காண விரும்பி. புல் மிக்கு - அறுகம்புல்
முதலியவை மிக வளரப்பெற்று.
12.
வழங்குநர் - வழிச்செல்வோர்.
1பதிற். 22,
உரை.
|