|
13.
ஆற்ற - வழிகளையுடைய. ஏறு புணர்ந்து - ஆண்மரையோடு கூடி.
ஆற்ற (13) காடாயின (15) என்க.
14.
அண்ணல் மரையா - தலைமையையுடைய மரையா. அமர்ந்து
- விரும்பி.
16.
மைந்து மலி பெரும் புகழ் - வன்மையினால் மிக்க பெரிய புகழை.
அறியாராய் மலைந்த என்க.
17.
போர் எதிர் வேந்தர் - போரை ஏற்றுக்கொண்ட அரசர். தார்
அழிந்து ஓராலின் - தூசிப்படை கெட்டொழிய நீங்குதலால்.
18-9.
மருது இமிழ்ந்து - மருதமரம் தன்னிடத்தே பறவைகள் ஒலிக்க;
இமிழ்ந்து - இமிழ; எச்சத்திரிபு. மருதுமலி பெருந்துறை: "துறைநணி
மருதமேறி" (பதிற். 27 : 6); "உயர்சினை
மருதத் துறையுறத் தாழ்ந்து",
"துறைநணி மருதத்து" (புறநா. 243 : 6, 344:3).
நளியிரும் பரப்பின் -
செறிந்த பெரிய பரப்பினையுடைய. ததைந்த - சிதைந்த. காஞ்சி -
காஞ்சியென்னும் மரம்.
20.
முருக்கு தாழ்பு எழிலிய - முள்ளுமுருங்கையின் பூக்கள் நீரிலே
தங்குதலால் அழகு பெற்ற. நெருப்பு உறழ் அடைகரை - நெருப்பை ஒத்த
நீரை அடைந்த கரையில். முள்ளுமுருங்கையின் பூவிற்கு நெருப்பு உவமை.
"பொங்கழன் முருக்கி னொண்குரல்" (அகநா. 277
: 17)
21.
நந்து - சங்கு
22.
பழனப் படப்பை - பொய்கையை அடுத்த விளைநிலத்திலுள்ள.
23.
அழல் மருள் - நெருப்பை ஒத்த. தாமரைப் பூவிற்கு நெருப்பு
உவமை: பதிற், 19 : 20, குறிப்புரை. பூவின்
தாமரை : முதலுக்கேற்ற அடை.
24.
குறாஅது - பறிக்கப்படாமல்.
23-4.
தாமரையும் ஆம்பலும்.
25.
அறாஅ யாணர் - இடையறாத புதிய வருவாயையுடைய,
அகன்றலை நாடு............அகன்ற இடத்தையுடைய நாடுகள் (3)
(பி
- ம்) 15. காடாயினவே.
| 24. |
நெடுவயி
னொளிறு மின்னுப்பரந் தாங்குப்
புலியுறை கழித்த புலவுவா யெஃகம்
ஏவ லாடவர் வலனுயர்த் தேந்தி
ஆரரண் கடந்த தாரருந் தகைப்பிற் |
| 5 |
பீடுகொண்
மாலைப் பெரும்படைத் தலைவ
ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல்
ஈத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும்
அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி
ஞால நின்வழி யொழுகப் பாடல்சான்று |
|