பக்கம் எண் :

67

 10 நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத்
திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ
குலையிழி பறியாச் சாபத்து வயவர்
அம்புகளை வறியாத் தூங்குதுளங் கிருக்கை
இடாஅ வேணி யியலறைக் குருசில்
 15 நீர்நிலந் தீவளி விசும்போ டைந்தும்
அளந்துகடை யறியினு மளப்பருங் குரையைநின்
வளம்வீங்கு பெருக்க மினிதுகண் டிகுமே
உண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது
குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோ
 20 றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின்
எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும்
கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி
வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர
வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
 25 பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக்
கலிழுங் கருவியொடு கையுற வணங்கி
மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும்
கொண்டற் றண்டளிக் கமஞ்சூன் மாமழை
காரெதிர் பருவ மறப்பினும்
 30 பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே.

     துறை - இயன்மொழி வாழ்த்து. வண்ணம் - ஒழுகுவண்ணம்.
தூக்கு -சந்தூக்கு. பெயர் - சீர்சால் வெள்ளி (24)

     (ப - ரை) 4 - 5. தாரருந் 1தகைப்பிற் பீடுகொண் மாலைப் பெரும்
படையென்றது தார்ப்படைக்கு அழித்தற்கரிய மாற்றார் படைவகுப்பிலே
வென்றிசெய்து பெருமைகொள்ளும் இயல்பையுடைய அணியாய் நிற்கும்
பெருபடை யென்றவாறு.

     6. அவை பிறர்ச்செய்தலென்புழிப் பிறரையென விரியும்
இரண்டாவதனை அவை செய்தலென நின்ற செய்தலென்னந்தொழிலைப்
போந்த பொருளாற் செய்வித்தலென்னும் தொழிலாக்கி அதனோடு முடிக்க.

     12. குலையழிபு அறியாச் சாபமென்றது போர்வேட்கையான் இன்ன
பொழுது போருண்டாமென்று அறியாதே எப்பொழுதும் நாணியேற்றியே
கிடக்கும் வில்லென்றவாறு.


     1தகைப்பு என்பது கட்டப்பட்ட மாளிகைக்கு ஆவதுபோல இங்கே
வகுத்து அமைக்கப்பட்ட படையணிக்கு ஆயிற்று.