பக்கம் எண் :

68

     13. அம்பு களைவறியாவென்றது போர்வேட்கையான் எப்பொழுதும்
கையினின்றும் அம்பைக் களைதலறியாவென்றவாறு. தூங்கு துளங்கு
இருக்கையென்றது படை 1இடம்படாது செறிந்து துளங்குகின்ற
இருப்பென்றவாறு.

     14. இடா ஏணி - அளவிடப்படாத எல்லை. இயலென்றது
பாசறைக்குள்ள இயல்பை; பாசறை அறையெனத் தலைக்குறைந்தது.

     18. உண்மாரும் தின்மாருமென்பன குறுகி நின்றன; உண்மாரையும்
தின்மாரையுமென்னும் இரண்டாவது 2விகாரத்தால் தொக்கது.
அறியாதென்பதனை அறியாமலெனத் திரிக்க.

     24-5. வறிது வடக்கு இறைஞ்சி சீர் சால் வெள்ளி பயம்கெழு
பொழுதோடு ஆநியம் நிற்பவென்றது சிறிது வடக்கிறைஞ்சின புகழான்
அமைந்த வெள்ளி மழைக்குப் பயன்படும் மற்றைக் கோட்களுடனே
தான் நிற்கும் நாளிலே நிற்கவென்றவாறு.

     3பொழுதென்றது அதற்கு 4அடியாகிய கோளை.

     வறிது வடக்கிறைஞ்சியவென்னும் அடைச்சிறப்பான் இதற்கு 'சீர்சால்
வெள்ளி'
என்று பெயராயிற்று.

     பெரும்படைத்தலைவ (5), திருந்திழை கணவ (11) குருசில் (14),
நீர்நிலமுதலைந்தினையும் (15) அளந்து முடிவறியினும் பெருமை அளந்தறி
தற்கரியை (16); நின் செல்வமிக்க பெருமை இனிது கண்டேம் (17); அஃது
எவ்வாறு இருந்ததென்னின், வாடாச்சொன்றி (22), மழை (28) காரெதிர் பருவ
மறப்பினும் (29), பேரா யாணர்த்து; அப்பெற்றிப்பட்ட நின்வளம் வாழ்க (30)
என வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் பெருமையும் கொடைச்சிறப்பும் கூறி
வாழ்த்தியவாறாயிற்று.

     (கு-ரை) 1. உயர்ந்த ஆகாயத்திடத்தே விட்டு விளங்கம் மின்னல்
பரந்தாற்போல்.

     2. புலித்தோலாற்செய்த உறையினின்றும் நீக்கிய புலால் நாற்றத்தை
யுடைய வேலை (பதிற். 19 4)

     1-2. வேலுக்க மின்னல் உவமை; புறநா. 42 : 4.

     3. ஏவல் ஆடவர் - அரசனது ஏவலிற் செல்லும் வீரர்கள். வலன்
உயர்த்து - வலப்பக்கத்தே உயரத்தூக்கி; வெற்றிகளத்தே தூக்கி எனலுமாம்;
"வலவயி னுயரிய" (முருகு. 152) என்ற விடத்து நச்சினார்க்கினியர்
'வெற்றிக்களத்தே எடுத்த' என உரை எழுதினர். "அடுகளத் துயர்கநும்
வேலே" (புறநா. 58 : 29) என்பதில் போர்க்களத்தில் வேலுயர்த்த்லைக் கூறல்
காண்க.

     4-5. ஆரரண்கடந்த - பிறரால் அழித்தற்கரிய பகைவர் அரணங்களை
வென்ற. தூசிப்படையால் அழித்தற்கரிய பகைவரது அமைப்பின் கண்
வெற்றியாற் பெருமையைக்கொண்ட. தகைப்பு என்றது இங்கே


     1இடம்படாது - இடம்பற்றாமல் (புறநா. 62 : 10 - 11)   

     2உயர்திணை மருங்கின் ஒழியாது வரவேண்டு மாதலின் (தொல்.
தொகைமரபு, 15) விகாரத்தால் தொக்கதென்றார்.

     3பொழுதென்றது இங்கே ஆகுபெயர்.

     4அடி-காரணம்.