பக்கம் எண் :

69

     அணிவகுப்பை. மாலை - இயல்பு (தொல். உரி, 15), ஏந்தியென்னும்
சினைவினை கடந்த என்னும் முதல் வினையோடு முடிந்தது.

     6. ஓதல் - வேதத்தை ஓதுதல். வேட்டல் - யாகம் செய்தல். அவை
பிறர்செய்தலாவன ஓதுவித்தலும் வேட்பித்தலும்.

     7. ஏற்றல் - கொள்ளத்தகும் பொருளைப் பெற்றுக்கொள்ளுதல். ஆறு
புரிந்து - ஆறு தொழில்களைச் செய்து.

     8. அறம்புரி அந்தணர் - தருமத்தை விரும்புகின்ற அந்தணர்; "அந்தண
ரென்போ ரறவோர்" (குறள். 30). அந்தணர்பாற் பணிவான வார்த்தைகளைச்
சொல்லி; "பார்ப்பார்க் கல்லது பணிபறியலையே" (பதிற். 63 : 1) என்றலின்
இங்ஙனம் கூறினார். வழி மொழிதல் : புறநா. 239 : 6.

     6-8. அந்தணர் அறுதொழில் : "அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்"
(தொல். புறத். 20); ‘’இருமூன் றெய்திய வியல்பினின் வழாஅது ................
இருபிறப் பாளர்’’ (முருகு. 177 - 82) அந்தணர்க்குக் கூறிய பொதுத்
தொழில்கள் ஆறென்புதற்கு மேற்கோள் தொல். புறத். 20,ந ;

     9. பாடல்சான்று - புலவர் புகழும் பாடல்கள் அமைந்து; இது
நல்லிசைக்கு அடை.

     10. நாடு உடன் விளங்கும் - நாடு முழுவதும் விளங்கிய. நாடா நல்
இசை - ஐயுற்று ஆராயப்படாத உலகறிந்த நல்ல புகழையுடைய (சிறுபாண்.
82, ந.). பாடல் சான்றமையால் புகழ் நாடுமுழுவதும் விளங்குவதாயிற்று.

     11. திருந்திய இயல்மொழி - பிறர் திருத்த வேண்டாதே இயல்பாகவே
குற்றத்தினின்றும் நீங்கித் திருந்திய மொழி. திருந்திழை கணவ : பதிற்.
14 : 15, குறிப்புரை. இத்தொடர் அனைத்தும் ஒரு பெயராக நின்றது.

     12. நாணியை வளைத்தலினின்றும் இறக்குதலை அறியாத
வில்லையுடைய வீரர். "கொடுந்தொழில் வல்விற் குலைஇய கானவர்" (முருகு.
194) என்ற பாடத்திற்கு உரை கூறும்பொழுது குலைஇய என்னும் சொல்லுக்கு
வளைத்த என நச்சினார்க்கினியர் பொருளுரைத் தாராதலின், இங்கே
வளைத்தலினின்றும் நீங்குதலை அறியாத வில் எனலுமாம்.

     13. தூங்கு - செறிந்த. துளங்கு இருக்கை - வீரர்களின் மிகுதியால்
அசைகின்ற இடங்களையுடைய.

     14. அளவிடப்படாத எல்லையாகிய இயல்பையுடைய பாசறைக்கண்
தங்கும் உபகாரியே. ஏணி - எல்லை (புறநா. 35 : 1)

     12-4. வயவர் அம்பு களைதலை அறியாத இருக்கையையுடைய
அறையென்க.

     15-6. ஓடு: எண்ஓடு. கடை அறியினும் - எல்லையை அறிந்தாலும்.
அளப்பரியை; குரை : அசைநிலை. ஐந்து பூதங்களை அளவுப்பெருமைக்கு
எடுத்துரைத்தல் மரபு (பதிற், 14 : 1 - 2, குறிப்புரை).

     17. கண்டிகும் - கண்டோம்.

     18. வரைகோள் அறியாது - எல்லை அறியாது; தடைசெயப் படுதலை
அறியாமலெனலும் ஆம்.

     'என்பார் என்மரெனத் திரிந்தது, உண்மருந் தின்மரும் என்றாற் போல'
(சீவக. 1843, ந.)

     19. ஒலித்தலையுடைய பூண்மழுங்கிய உலக்கைகளையுடைய