பக்கம் எண் :

70

இடந் தோறும். உணவுக்கு வேண்டிய நெல்லைக் குற்றிக் குற்றி உலக்கையின்
பூண் மழுங்கியது.

     20. இலையையுடைய சேம்பு மேலே வருகின்ற சமையல் செய்தற்குரிய
மடாவினையும். இலையென்றது முதலுக்கு அடை. சேம்பு என்றது இங்கே
உணவுக்குப் பயன்படும் அதன் தண்டையும் கிழங்கையும் அவற்றை
வேகவைத்தலின் மேலே எழுந்தன. ஆடு - அடுதல். மடாவென்பது மிடா
வெனவும் வழங்கும்.

     21. அரிவாள் செத்தும் பொருட்டுப் பட இரத்தத்தாற் சிவந்து தோற்றும்
இறைச்சியையும் உடைய.

     22. வாடாச்சொன்றி - என்றும் குறைவுபடாத உணவு. சொன்றி யென்றது
இங்கே உணவுப் பொதுவினைக் குறித்தது.

     18-22. "யாவர்க்கும், வரைகோ ளறியாச் சொன்றி" (குறுந். 233 : 5 - 6)

     23. சுடர்வர - விளங்க. "விரிகதிர் வெள்ளி" (சிலப்.10 : 103). ஆதலின்
இங்ஙனம் கூறினார்.

     24. வறிது - சிறிதளவு. வடக்குத்திசையின் கண்ணே தாழ்ந்த சிறப்புச்
சான்ற வெள்ளியென்னும் கோள். மழைக் கோளாகிய வெள்ளி
வடக்கிறைஞ்சின் மழையுண்மையும், தெற்கெழுந்தால் மழையின்மையும் நேரும்;
'விளங்குகின்ற வெள்ளியாகிய மீன் தான் நிற்றற்குரிய வடதிசையில் நில்லாமல்
தென்றிசைக் கண்ணே போகினும்' (பட்டினப். 1 - 2, ந.) என்பதையும்
மதுரைக். 108 உரையின் அடிக் குறிப்பையும் பார்க்க. மழை பெய்தற்குக்
காரணமாதலின் சீர்சால் வெள்ளியென்று சிறப்பித்தார்.

     வறிதென்னும் உரிச்சொல் சிறிதென்னும் குறிப்புணர்த்தும் (தொல். உரி.
38, ந.)

     25. பயன்பொருந்திய மற்றைக் கோள்களோடு தனக்குரிய நல்ல நாளிலே
நிற்க.

     24-5. "நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப், பயங்கெழு வெள்ளி
யாநிய நிற்ப" (பதிற். 69 : 13 - 4)

     26. கலங்கி வருகின்ற நீர்முதலிய தொகுதியோடு பக்கத்திற் பொருந்த
இறங்கி; மழை அமரர்கண் முடியும் ஆறில் ஒன்றாதலின் (தொல் புறத். 26, ந.)
கையினால் மிக வணங்க எனலுமாம்; வணங்கி - வணங்க.

     27. உலகில் நிலைபெற்ற உயிர்கள் உயரும் பொருட்டு வானத்தில்
வலமாக எழுந்து முழங்கும்.

     28. கொள்ளுதலையுடைய தண்ணிய துளிகளாகிய நிறைந்த சூலையுடைய
கரியமேகத்தின் மழை.

     29. காரை எற்றுக்கொள்ளும் கார்காலத்திற் பெய்தலை மறந்தாலும்.

     30. மாறாத புதுவருவாயையுடையது. வளன் - செல்வச் சிறப்பு. சொன்றி
(22) பேராத யாணர்த்து (30) என்க.

     நின் வளத்தின் மிகுதியைக் கண்டோம்; அது பேரா யாணர்த்து;
அவ்வளன் வாழ்கவென வாழ்த்தினார். (4)

 

25. மாவாடியபுல னாஞ்சி லாடா
கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை