| |
இனம்பரந்த
புலம் வளம்பரப் பறியா
நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதைபோகி |
| 5 |
நீ,
உடன்றோர் மன்னெயி றோட்டி வையா
கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப்
பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கின்
ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி
முனையகன் பெரும்பா ழாக மன்னிய |
| 10 |
உருமுறழ்
பிரங்கு முரசிற் பெருமலை
வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்கக்
கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ
நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே. |
துறை
- வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும்
வஞ்சித்தூக்கும். பெயர் - கானுணங்கு கடுநெறி (8)
(ப
- ரை) 2. கடாச்சென்னியென்னும் ஒற்று மெலிந்தது.
4.
கழுதை போகியென்பதனைப் போகவெனத் திரிக்க.
5.
தோட்டி - காவல். 7. அழல் - காட்டுத்தீ.
8.
கானுணங்கு கடுநெறி யென்றது மழையின்மையாற் கானம் தீந்த கடிய
வழியென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, ‘கானுணங்கு கடுநெறி’ என்று பெயராயிற்று.
9.
முனை - ஆறலைகள்வர் செய்யும் போர்.
12.
செலவின் கடுமை ஆற்றல் தோன்றப் பறவையாகக் கூறுவான்
உபசார வழக்குப்பற்றிச் சிறகு அகைப்பவென்றானென்க.
முரசினொட
(10) என ஒடு விரித்து அதனைத் தேரோட்டிய (13)
என்பதனோடு முடிக்க.
நீ
(12) தேரோட்டிய பிறர்நாடு (13) அழிந்தவாறு சொல்லின், நாடு
நின் மா வழங்கினவயல் பின்பு கலப்பை வழங்கா (1); நின் யானையினம்
பரந்த வயல் பின் செல்வம் பரத்தலையறியா (3); நின் படையாளர் சேர்ந்த
மன்றம் கழுதையாலுழப்பட (4), நீ உடன்ற அரசர்தம் நகரிகள் பின்பு தமக்கு
அரணாகக் காவலாளரை வைக்கப்படா (5); இவ்வாறு அழிந்தபடியேயன்றிச்
சில்லிடங்கள் கடுங்கால் ஒற்றலின் (6); அழலாடிய மருங்கினையுடைய (7)
கானுணங்கு கடுநெறியினையும் (8) முனைகளையுமுடைய அகன்ற
பெரும்பாழாக நின்றன (9) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன்வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.
தேரோட்டிய
பிறர்நாடு இவ்வாறு அழிந்ததென எடுத்துச் செலவினை
மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடாணாயிற்று.
'மாவாடிய'
(1) என்பது முதலாக மூன்றும் வஞ்சியடியாக வந்தமையால்
வஞ்சித் தூக்குமாயிற்று.
|