பக்கம் எண் :

73

26. தேஎர் பரந்தபுல மேஎர் பரவா
களிறா டியபுல நாஞ்சி லாடா
மத்துர றியமனை யின்னிய மிமிழா
ஆங்குப், பண்டுநற் கறியுநர் செழுவள நினைப்பின்
 5 நோகோ யானே நோதக வருமே
பெயன்மழை புரவின் றாகிவெய் துற்று
வலமின் றம்ம காலையது பண்பெனக்
கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ
மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப்
 10 பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக்
காடுறு கடுநெறி யாக மன்னிய
முருகுடன்று கறுத்த கலியழி மூதூர்
உரும்பில் கூற்றத் தன்னநின்
திருந்துதொழில் வயவர் சீறிய நாடே.

     இதுவுமது. பெயர் - காடுறு கடூநெறி (11)

     (ப - ரை) 1. தேர்பரந்த புலம் ஏர் பரவாவென்றது ஒருகால் தேர்
பரந்த வயல் அத்தேர் பரந்த மாத்திரையாற் சேறாய்ப் பின்பு உழுதற்கு ஏர்
பரவாவென்றவாறு.

     2. களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடாவென்றது பன்றிகள் உழுத
1கொல்லைத்தறை அவை உழுத மாத்திரையானே புழுதியாகிப் பின்பு கலப்பை
வழங்காவென்றவாறு.

     3. மத்து உரறிய மனை இன்னியம் இமிழாவென்றது மத்து ஒலிக்கின்ற
மனைகள் அம்மத்தொலியின் மிகுதியானே இனிய இயங்களின் ஒலி
கிளராவென்றவாறு.

     8. கட்பனியென்னும் ஒற்று மெலிந்தது.

     10-11. நெருஞ்சியின் அடர்ச்சியை நெருஞ்சிக்காடெனக் கூறிய
அடைச்சிறப்பான் இதற்கு,'காடுறு கடுநெறி' என்று பெயராயிற்று.

     மூதூர்போல (12) என உவம உருபு விரித்து, அதனை வயவர் சீறிய
(14) என்னும் வினையொடு முடிக்க. இனிப் போலுமென விரித்து வயவர் சீறிய
நாடெனலும் ஒன்று. இனி மூதூர்க்கூற்றமெனக் கூட்டிக் கூற்றுவன் கொடுமை
மிகுதி கூறலுமொன்று.

     13. உரும்பில் கூற்றென்பது 'பிறிதொன்றால் நலிவுபட்டு மனக்
கொதிப்பில்லாத கூற்றமென்றவாறு. 2உருப்பென்னும் ஒற்று 3மெலிந்தது.

     நின் (13) வயவர் சீறியநாடு அவ்வயவர் சீறுதற்குமுன்பு இருக்கும்படி
சொல்லின் (14). தேர் பரந்த புலம் ஏர் பரவா (1); களிறாடிய புலம்


     1கொல்லைத்தறை-தரிசாய்க் கிடந்த காடு.

     2உருப்பு-வெம்மை; நெருப்பெனச் சிவந்த வுருப்பவி ரங்காடு"
(
அகநா. 11 : 2).

     3திருந்துதொழில் வயவரென்பது நோக்கி மெலிந்தது.