பக்கம் எண் :

75

     13. உரும்பு இல் கூற்றத்து அன்ன - பிறிதொன்றால் கொடுமை இல்லாத
கூற்றுவனைப்போன்ற.

     14. திருந்துதொழில் வயவர் - பின்னிடாத போர்த்தொழிலையுடைய
வீரர்; 'திருந்தடி - பிறக்கிடாத அடி' (புறநா. 7 : 2, உரை). சீறிய நாடு -
கோபித்து அழித்த நாடுகள்.

     வயவர் சீறிய நாடு (14) சிறுமைகூர (9) நெருஞ்சிக் (10) காடுறுகடு
நெறியாக மன்னிய (11); அறியுநர் செழுவளம் நினைப்பின் (4) நோதக வரும்;
யான் நோவேன் (5) என முடிக்க.

     (பி - ம்.) 4 ஆங்கப். 7.வலனின்றம்ம. 9.நெலிவுடை 11.கடுநெறியாகு. (6)


27. சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலிற்
றொடர்ந்த குவளைத் தூநெறி யடைச்சி
அலர்ந்த வாம்ப லகமடி வையர்
சுரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி
 5 அரிய லார்கைய ரினிதுகூ டியவர்
துறைநணி மருத மேறித் தெறுமார்
எல்வளை மகளிர் தெள்விளி யிசைப்பிற்
பழனக் காவிற் பசுமயி லாலும்
பொய்கை வாயிற் புனல்பொரு புதவின்
 10 நெய்தன் மரபி னிரைகட் செறுவின்
வல்வா யுருளி கதுமென மண்ட
அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப
நல்லெருது முயலு மளறுபோகு விழுமத்துச்
சாகாட் டாளர் கம்பலை யல்லது
 15 பூச லறியா நன்னாட்
டியாண ரறாஅக் காமரு கவினே.

     துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணம்.
தூக்கு - செந்தூக்கு. பெயர் - தொடர்ந்த குவளை (2).

     (ப - ரை) 2. தொடர்ந்த குவளை - ஆண்டுகள்தோறும், இட்டு
ஆக்க வேண்டாது 1தொண்டு இட்டதே ஈடாக எவ்வாண்டிற்கும் இடையறாது
தொடந்துவரு மென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'தொடர்ந்த குவளை' என்று பெயராயிற்று.

     மடிவையரென்பதனை (3) வினையெச்ச முற்றாக்கி, அதனைத் தெள்விளி
யிசைப்பின் (7) என்னும் வினையொடு முடிக்க.

     மகளிர் (7) தெறுமார் (6) இசைப்பின் (7), காவிற் பசுமயில் ஆலும் (8)
என்றது வயலிற் புகுந்து உழக்காதிருத்தற் பொருட்டு அவ்வயற் புள்ளோப்பும்


     1தொண்டு - தொன்று.