பக்கம் எண் :

77

     ஒளியையுடைய வளையையணிந்த மகளிர் தெளிந்த ஓசையைச்
செய்தால். துறைநணி மருதம் : பதிற். 23 : 18-9; புறநா. 243 : 6-7. 344 : 3.

     8. வயல்களை அருகிலுடைய சோலைகளில் பசிய மயில் ஆடும்.
தம்மை ஓட்டும்பொருட்டு மகளிர் செய்யும் ஓசையைப் பாட்டென மருண்டு
ஆடின.

     6-8. மருதமேறி மயில் ஆலின. அவை நெற்கதிரை உண்ணாதிருத்தற்
பொருட்டு மகளிர் ஓசை செய்தனர்; "சென்நெ லுண்ட பைந்தோட்டு மஞ்ஞை,
செறிவளை மகளி ரோப்பலிற் பறந்தெழுந்து, துறை நணி மருதத்திறுக்கு
மூரொடு" (புகநா.344: 1-3)

     9. பொய்கையின் நீர் வருதற்குரிய வாய்த்தலையும் அதன் கண் நீர்
வந்து மோதுகின்ற கதவினையும் உடைய.

     10. பண்டே தொடர்ந்துவந்த நெய்தற் பூக்களையும் வரிசையாக உள்ள
வண்டுகளையும் உடைய வயலில்.

     11. வலிய வாயையுடைய சக்கரம் விரைவிலே நெருங்க. வாயென்றது
சக்கரத்தின் பட்டத்தை.

     12. சேற்றிலே புதைந்து; புதைந்து மண்டவெனக் கூட்டுக. துள்ளுபு
துரப்ப - துள்ளிச் செலுத்துகையினாலே.

     13. நல்ல எருதுகள் முயலுகின்ற, சேற்றினின்றும் நீங்குகின்ற
துன்பத்தையுடைய.

     14. வண்டியை ஓட்டுவோரது முழக்கத்தையன்றி சாகாடு வண்டி.

     12-4. "அள்ளற் றங்கிய பகடுறு விழுமம், கள்ளார் களமர் பெயர்க்கு
மார்ப்பே" (மதுரைக். 259 - 60) என்பதையும் அதன் அடிக்குறிப்பையும்
பார்க்க. 15. பூசல் - ஆரவாரம்.

     16. புதுவருவாய் இடையறாத விருப்பம் பொருந்திய அழகு.   

     நன்னாட்டுக்கவின் நீ சிவந்தனை நோக்கலின் சிதைந்து.

     (பி - ம்.) 6. துறையணி. 11. மண்டி. (7)

 

28. திருவுடைத் தம்ம பெருவிறற் பகைவர்
பைங்கண் யானைப் புணர்நிரை துமிய
உரந்துரந் தெறிந்த கறையடிக் கழற்காற்
கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப
 5 இளையினிது தந்து விளைவுமுட் டுறாது
புலம்பா வுறையு ணீதொழி லாற்றலின்
விடுநிலக் கரம்பை விடரளை நிறையக்
கோடை நீடக் குன்றம் புல்லென
அருவி யற்ற பெருவறற் காலையும்
 10 நிவந்துரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச்
சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர்
உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறைச்