பக்கம் எண் :

79

     6. வருந்தாத இருப்பிடங்களிலே நீ தொழிலைச் செய்தலால் புலம்பா
உறையுள் என்றது குடிமக்கள் பகை பசி பிணி என்னும் துன்பங்கள் இன்றி
அமைதியாக உறையும் இடங்களை. தொழில் என்றது அம் மூன்று
வருத்தங்களையும் போக்கிப் புரக்கும் தொழிலை.

     7-13. ஆற்று நீரின் சிறப்பு. 7. விளைவின்றி விடப்பட்ட நிலத்
தினையுடைய தரிசுகளிலுள்ள வெடிப்புக்களில் நீர் நிறையும்படி.

     8-9. கோடைத்தன்மை நீட்டித்திருத்தலின் மலைகள் பொலி வழிய,
அருவி ஒழுகாது அற்றுப்போன பெரிய வறட்சிக் காலத்திலும்; "கல் காயும்
கடுவேனிலொடு" (மதுரைக். 106)

     10. மிக்குக் கரையின்கண்ணே இறங்குகின்ற அகன்ற இடத்தையுடைய
பெரிய ஆற்றினது. பேரியாறு - சேரநாட்டிலுள்ளதோர் ஆறு எனலுமாம்;
"பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை" (சிலப். 25 : 22); பேரியாற்றினது
மலிர் நிறை (12) என முடியும்.

     11. சிறப்பையுடைய அகன்ற வயல்களிடத்திலே பரவி மிகும்
பொருட்டும்.

     12. தழைகளை மேலே போர்த்துத் தோற்றிவருகின்ற வெள்ளத்தினது.
உவலை - தழை.

     13. சிவந்த நீரினாலுண்டாகம் ஆரவாரம் அல்லாமல்; வெள்ளம் கண்ட
உழவரது ஆரவாரமும் நீர்விளையாட்டுச் செய்வார் ஆரவாரமும் ஒருங்கு
கொள்க.

     7-12. அளை நிறையவும் புலம் மிகவும் வருகின்ற மலிர்நிறை.

     14. வெம்மை அரிது - பகைவரால் உண்டாகும் கொடுமை இல்லாதது.

     12-4. பதிற். 13 : 12, உரை. நீர்ப்பூசலல்லது பகைவர்களால்
உண்டாகும் பூசல் இல்லையென்பார் அந்நீர்ப் பூசலைப் பகைவர் பூசல்
போலத் தோற்றும்படி சொற்றொடர் அமைத்தார். உவலைக் கண்ணியைச்
சூடிக் கோபித்து வருகின்ற வெள்ளத்தின் சிவந்த நீர்மையையுடைய பூசல்
என ஒரு பொருள் தோற்றியது. வீரர் உவலைக்கண்ணி சூடுதல்;
"உவலைக்கண்ணி வன்சொ லிளைஞர்" (மதுரைக் 311). "உருத்தெழு
வெள்ளம்" (பதிற். 72 : 10) என்பதற்கு, 'கோபித்தெழு வெள்ளம் என
உரையாசிரியர் எழுதிய உரை இங்கே கருதற்குரியது.

     நின் அகன்றலை நாடு மறவர் தொடை மறப்ப, நீ ஆற்றலின் வெம்மை
யரிது; ஆதலால் திருவுடைத்து,

     (பி - ம்.) 5. வினையினிது. 10. கரையழிதரு, (8)

29. அவலெறிந்த வுலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
தடந்தா ணாரை யிரிய வயிரைக்
 5 கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின்
வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும்
அழயா விழவி னிழியாத் திவவின்