|
வயிரிய
மாக்கள் பண்ணமைத் தெழீஇ
மன்ற நண்ணி மறுகுசிறை பாடும் |
10 |
அகன்கண்
வைப்பி னாடும னளிய
விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர்புதை மாக்கண் கடிய கழற
அமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும்
பெரும்பல் யானைக் குட்டுவன் |
15 |
வரம்பி
றானை பரவா வூங்கே. |
துறை
- வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும்
அது. பெயர் - வெண்கை மகளிர் (6)
(ப
- ரை) 3. முடந்தை நெல்லென்றது கதிர்க்கனத்தாலே வளைந்து
முடமான நெல்லென்றவாறு; முடந்தையென்பது பெயர்த்திரிசொல்; இனிப்
பழவழக்கென்பது மொன்று.
5.
கொழுமீனார்னாகய வென்றது ......................................................................
6. இச்சிறப்பானே
இதற்கு, 'வெண்கைமகளிர்' என்று பெயராயிற்று.
இனி வெண்சங்கணிந்த கையென்பாருமுளர்; இனி 1அடுகை முதலாகிய
தொழில் செய்யாத கையென்பாருமுளர்.
7. திவலையுடைய
யாழ் திவவெனப்பட்டது.
குட்டுவன்
வரம்பில் தானை பரந்த இப்பொழுது அழிந்து கிடக்கின்ற
இந்நாடுகள், குட்டுவன் (14) வரம்பில் தானை பரவாவூங்கு (15) முடந்தை
நெல்லின் விளைவயற்பரந்த (3) நாரையிரிய (4) வெண்கை மகளிர் வெண்குரு
கோப்புதலையுடையவாய் (6) அழியாத விழவினையும் இழியாத திவவினையு
முடையவாய் (7) வயிரியமாக்கள் எழீஇ (8) மன்ற நண்ணி மறுகு சிறைபாடும்
(9), இப்பெற்றிப்பட்ட சிறப்பையுடைய அகன்கண் வைப்பினாடு
இப்பெற்றியெல்லாமழிந்து கண்டார்க்கு அளித்தலையுடைய (10) என வினை
முடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.
வரம்பிறானை
பரவாவூங்கென எடுத்துச்செலவினை மேலிட்டுக்
கூறினமையால் வஞ்சித்றைப் பாடாணாயிற்று.
(கு
- ரை) 1. பச்சை அவலை இடித்த உலக்கையை அருகிலுள்ள
வாழை மரத்தில் சார்த்திவிட்டு. 2. வளையைக் கையிலே அணிந்த மகளிர்
வள்ளையைக் கொய்தற்கு இடமாகிய.
1-2.
"பாசவ லிடித்த் கருங்கா ழுலக்கை, ஆய்கதிர் நெல்லின்
வரம்பணைத் துயிற்றி ஒண்டொடிமகளிர் வண்ட லயரும்" (குறுந்.
288 : 1 - 3)
3. கதிரின்
கனத்தால் வளைவையுடைய நெல்லையுடைய விளையும்
வயல்களிடத்திலே பரவியுள்ள; மடத்தையுடையாள் மடந்தையானாற் போல
முடத்தையுடையது முடந்தையாதயிற்று; "முடந்தைநெல்" (பதிற்.
32 ; 13)
4, இரிய - நீங்க.
1பதிற்.18:
6, உரை பார்க்க.
|