பக்கம் எண் :

83

 40 ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற்
பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவர்
உருமுநில னதிர்க்குங் குரலொடு கொளை புணர்ந்து
பெருஞ்சோ றுகுத்தற் கெறியும்
கடுஞ்சின வேந்தேநின் றழங்குகுரன் முரசே.

     துறை - 1பெருஞ்சோற்றுநிலை. வண்ணமும் தூக்கும் அது. பெயர்
- புகன்றவாயம் (19)

     (ப - ரை) 2. மணிக்கலமென்றது நீலமணியாலே செய்த பாத்திரம்.
மணிக்கலத்தன்ன கழி (3) எனக்கூட்டி நெய்தற்பூவின் கருமையானும் அதன்
பாசடைக்கருமையானும் மணிக்கலம் போன்ற கழியென வுரைக்க.

     5. கானலென்றது தன்னிடத்து வந்து இரைகொள்ளுவதற்குக் குருகு
தங்கி வாழும் கானலென்றவாறு.

     6. புணரி வளை ஞர்லவென்றது கடல் கொண்டுவந்த சங்கு திரையிலே
துவண்ட வருத்தத்தாலே ஈனுகைக்கு மெய்வருந்திக் கதறவென்றவாறு.

     7. முத்தமொடு வார் துகிரெடுக்குமென்றது கரை நின்றோரில்
வளைநரலக் (6) கேட்டார் அம்முத்தெடுக்க வென்று வந்து முத்தையன்றி
அதனோடு பவளத்தையும் எடுக்குமென்றவாறு.

     பலபூவிழவினையுடைய (15) வைப்பு (21) எனக் கூட்டுக.

     17. புனல் பரந்தென்றதனைப் பரக்கவெனத் திரிக்க.

     18. பலசூழ் பதப்பரென்றது பல புரியாலும் சூழப்பட்ட மணற்
கோட்டையென்றவாறு.

     19. புகன்ற ஆயமென்றது முன்புமணலணைக்கு நில்லாத பெரு
வெள்ளத்தின் அணைசெய்து முடித்த விருப்பத்தையுடைய ஆயமென்றவாறு.

     இச்சிறப்புப் பற்றி, இதற்கு 'புகன்ற வாயம்' என்ற பெயராயிற்று.

     27-8. மணற்கோடு கொண்டென்றது 2மணற்கோட்டைக் கழலாடுதற்கு
இடமாகக் கொண்டென்றவாறு.

     இனிக் கழலென்றதனைக் 3கழலையுடைய தலைமகன்காலாக்கி
அக்காலொடு தலைமகளிர் புணர்ந்து உடன்போமென்பாருமுளர்.

     29. பிறவுமென்றது அவ்வாறு ஒருநிலமாகச் சொல்லப்படாத பல
நிலப்பண்புமுடைய இடங்களுமென்றவாறு.

     முன்பு எண்ணிநின்ற நிலங்களெல்லாம் ஆகுபெயரான் அந்நிலத்து
வாழ்வார் மேலனவாகக் கொள்க.

     30. ஒன்றுமொழிந்தென்றது ஒருவர் துணிந்ததே காரியமாக அனை
வரும் துணிந்து சொல்லியென்றவாறு.

     கடுஞ்சினங் கடாஅய் (33) எறியும் (43) முரசு (44) என முடிக்க. 


     1தொல். புறத். 8; பு. வெ. 58.
     2மகளிர் மணலில் கழல் முதலியன விளையாடுதல் இயல்பு;
பெரும்பாண். 327 - 35; புறநா. 36 : 4 - 5.
     3உடன் போக்கினை நினைத்துக் கூறியது இது.