பக்கம் எண் :

84

     33. முழங்கு மந்திரமென்றது முழங்க உச்சரிக்கப்படும் மந்திர
மென்றவாறு.

     மந்திரத்தானென உருபு விரித்து அதனைப் பேணியர் (34)
என்பதனோடு முடிக்க. 34. கடவுளென்றது முரசுறை கடவுளை.

     கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க (36) உயர்ந்தோனேந்திய
அரும்பெறற் பிண்டம் (35) எறும்புமூசா இறும்பூது மரபின் (38) நெய்த்தோர்
தூஉய நிறைமகிழ் இரும்பலி (37) கருங்கட்காக்கையொடு பருந்து இருந்தார
(39) எனக் கூட்டுக.

     இறும்பூது மரபிற் (38) பலி (37) என மாறிக் கூட்டுக.

     பேய்மகளும் (36) எறும்பும் அஞ்சிச் செல்லாத (38) பலிகளைக் (37)
காக்கையொடு பருந்திருந்தார (39) என்றது, அம்முரசுறை கடவுள் தன்
ஆணையால் தன்பலிகளை மேல் தன்னருளாலே போர்வென்றி விளைவது
அறிவித்தற்கு நிமித்தமாகக் காக்கையும் பருந்தும் இருந்து ஆரவென்றவாறு.

     இவ்விடத்துக்குப் பிறவாறு கூட்டியுரைப்பாருமுளர்.

     41. பெருஞ்சமம் ததைந்த செருவென்றது பகைவர் செய்யும் பேர்
சிதையும்படி செய்யும் போரென்றவாறு.

     41-2. மறவர் குரலெனக் கூட்டுக.

     ஆகுபெயரான் உருமுநிலனதிர்க்குங் குரலோடு ஒத்த மறவர் குரலை
உருமுநிலனதிர்க்கும் குரலென்றானாகக் கொள்க.

     43-4. எறியு முரசென்க.

     மென்பால் (8) முதலாகக் கடறு ஈறாக 'எண்ணப்பட்ட ஐவகை நிலத்து
மக்களும் பிறவும் (29) அந்நிலத்து வேந்தரும் வேளிரும் தங்களிலே ஒன்று
மொழிந்து (30) அரண்வலியாதே நடுங்காநிற்கும்படி (31) கடுங்குரல் விசும்
படைந்து அதிரும்படி (32) கடுஞ்சினத்தைக் கடாவிப் (33) பேய்மகள் கை
புடையூஉ நடுங்க (36) உயர்ந்தோனேந்திய பிண்டத்தினையும் (35) எறும்பு
மூசா மரபின் (38) நெய்த்தோர் தூஉய நிறைமகிழ் இரும்பலியினையும் (37)
கருங்கட்காக்கையொடு பருந்திருந்து ஆராநிற்கச் (39) செருப்புகள் மறவரது
(41) குரலொடே கோட்பாடு பொருந்திப் (42) பெருஞ்சோறு உகுத்தற்கு
எறியப்படா நின்றது. (43) நின்முரசு (44) என வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-8. நெய்தல் நிலத்தின் இயல்பு.

     1. இணர் ததை ஞாழல் - பூங்கொய்தலால் சிதைந்த ஞாழல் என்னும்
மரத்தையுடைய. மகளிர் கொய்தலால் சிதைந்தது. ஞாழல் - புலி நகக்
கொன்றை. ஞாழலையுடைய கரை.

     2. நீலமணியாற் செய்த பாத்திரத்தைப் போன்ற கரிய இதழையுடைய
நெய்தலினது. நெய்தற்பூவிற்கு நீலமணியுவமை: மதுரைக். 282; அகநா.
240 : 3. 3. பசிய இலையையும் குளிர்ச்சியையுமுடைய கழியைத் துழாவி.
துழாவியது இரையின் பொருட்டு.

     3-4. புன்னைமரத்தின் வெள்ளிய பூங்கொத்தையுடைய நீரிற்படும்
கிளையில் நாரை முதலிய பறவைகள் தங்குகின்ற.