பக்கம் எண் :

88

     10. நெடும்பாரதாயனார் முந்துறக் காடுபோந்தவென்றது தன்
புரோகிதராகிய நெடும்பாரதாயனார் தனக்குமுன்னே துறந்து காடு போக
அதுகண்டு தானும் துறவுள்ளம் பிறந்து துறந்து காட்டிலே போன வென்றவாறு.

                  (பதிகம்)

  இமைய வரம்பன் றம்பி யமைவர
உம்பற் காட்டைத் தன்கோ னிறீஇ
அகப்பா வெறிந்து பகற்றீ வேட்டு
மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக்
 5 கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்துக்
கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி
இருகட னீரு மொருபக லாடி
அயிரை பரைஇ யாற்றல்சான் முன்போ
டொடுங்கா நல்லிசை யுயர்ந்த கேள்வி
 10 நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த

     பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார்
பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம்: அடுநெய்யாவுதி, கயிறு குறுமுகவை,
ததைந்தகாஞ்சி, சீர்சால்வெள்ளி, கானுணங்குகடுநெறி, காடுறுகடுநெறி,
தொடர்ந்தகுவளை, உருத்துவருமலிர்நிறை, வெண்கை மகளிர், புகன்றவாயம்.
இவை பாட்டின் பதிகம்.

     பாடிப்பெற்ற பரிசில்: 'நீர் வேண்டியதுகொண்மின்' என 'யானும்
என்பார்ப்பனியும் சுவர்க்கம் புகல்வேண்டும்' என, 1பார்ப்பாரிற் பெரியோரைக்
கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியிற்
பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார்.

     இமயவரம்பன்றம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் இருபத்தையாண்டு
வீற்றிருந்தான்.

     (கு - ரை) 2. தன் கோல் நிறீஇ - தன் செங்கோற்கீழே அமைத்து.

     3. அகப்பா - ஓர் அரண். அகப்பா எறிந்தது: பதிற். 22 : 26;
நற்.
14 : 4 - 5; சிலப். 28 : 144.


     1யாகங்களைப் பண்ணிப் பெரிய சுவர்க்கத்து ஏறப்போம் அந்தணர்
(
மதுரைக். 494-5, ந.)