பக்கம் எண் :

89

     4. தன் அறிவோடு ஒக்கும் முறையையுடைய பெரியோரைத்
தழுவிக்கொண்டு.

     6. யானைகள் பொருந்திய வரிசையை நீளமாக்கி. இப்பத்துக்கு உரிய
பாட்டுடைத் தலைவன் பெயரிலுள்ள பல்யானையென்ற தொடர் இதனால்
வந்ததுபோலும்.

     7. இருகடல் - மேல்கடலும் கீழ்கடலும்.

     8. அயிரை பரைஇ - அயிரையென்னும் மலையினிடத்தே உள்ள
துர்க்கையைப் பரவி. அயிரையைப் பராவுதல்: பதிற்.88 : 12, 90 : 19. முன்பு
- வலிமை.

     7-8. "உருகெழு மரபி னயிரை மண்ணி, இருகடனீருமாடினோன்" (சிலப்.
28 : 145 - 6)

     10. பாரதாயனார் - பாரத்துவாச கோத்திரத்தில் உதித்தவர். முந்து உற
- துறவுபூண்டு முன்னே செல்ல.

                 மூன்றாம் பத்து முற்றிற்று.
      
                   நான்காம் பத்து

31. குன்றுதலை மணந்து குழூஉக்கட லுடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்த ரொராங்குக்
கைசுமந் தலறும் பூசன் மாதிரத்து
நால்வேறு நனந்தலை யொருங்கெழுந் தொலிப்பத்
 5 தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழாஅய்
அலங்கற் செல்வன் சேவடி பரவி
 10 நெஞ்சுமலி யுவகையர் துஞ்சுபதிப் பெயர
மணிநிற மையிரு ளகல நிலாவிரிபு
கோடுகூடு மதிய மியலுற் றாங்குத்
துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்
டாண்கட னிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு
 15 கருவி வானந் தண்டளி தலைஇய
வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய
பனிவார் விண்டு விறல்வரை யற்றே
கடவு ளஞ்சி வானத் திழைத்த
தூங்கெயிற் கதவங் காவல் கொண்ட