வண்ணங்கள்
:- ஒழுகு வண்ணம், ஒழுகு வண்ணமும் சொற்சீர்
வண்ணமும்.
தூக்குக்கள்:-
செந்தூக்கு, செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்.
சங்கமருவிய நூல்களால்
பண்டைக்காலத்திலிருந்த மக்களின்
வாழ்க்கைநிலையும் கொள்கைகளும் வெளிப்படுகின்றன; அவற்றுள் புறத்துறை
பற்றிய செய்யுட்களிலிருந்து பல சரித்திரச் செய்திகள் புலனாகின்றன.
பதிற்றுப்பத்திலிருந்து பெறப்படும் சரித்திரச் செய்திகளும் அக்காலத்தில்
இருந்த மக்களின் வாழ்க்கைநிலை அரசியல் முதலியவற்றைப் பற்றிய
செய்திகளும் மிகப் பல. எல்லாவற்றிலும் சிறப்பாக அறியப்படுவன அரசியற்
செய்திகளே. அரசரது ஆட்சி முறையும், கொடைச் சிறப்பும், வீரமிகுதியும்
பெரும்பாலும் ஒவ்வொரு பாட்டிலும் சொல்லப்பட்டுள்ளன. அறிவும் வீரமும்
பொருந்திய அரசன் உயர்ந்த உள்ளமும் கலைஞர்களையும்
வித்துவான்களையும் பாதுகாக்கும் இயல்பும் உடையவனாக இருந்தான்;
முன்னோர்கள் சென்ற நெறியில் நடந்து குடிகள் நன்மைபெற்று
வாழும்பொருட்டு வாழ்ந்தான்; புலவர்களும் பெரியோர்களும் பாராட்டும்
வண்ணம் குடிகளைப் பாதுகாத்து வந்தான். பஞ்சகாலத்திலும் பசியும்
பிணியுமின்றி ஒரு நாடு வாழ்வதற்கு அந்நாட்டு அரசனது செங்கோலே
காரணமென்பது அக்காலத்தினர் கொள்கை. ஆதலின் கிரகநிலைகளால்
உலகம் முழுவதும் பருவமாறித் துன்புற்றாலும் தன் நாட்டில் பொருள்
நிறைந்திருப்பதால் குடி மக்கள் துன்புறாமலிருப்பது சாத்தியமாகும்படி
அரசன் செய்தான்.
அவனுக்கு நல்ல
அமைச்சர்களும் சான்றோர்களும் அரசாட்சியில்
உதவி புரிந்தனர். புலவர்கள் அவன் புகழைப் பரப்பினார். வீரர்கள் அவனுக்கு வெற்றி
தேடித் தந்தனர். பாணரும், பொருநரும், விறலியரும் அவனது
அவையை அலங்கரித்து இசையும் கூத்தும் விளங்கச் செய்தனர். அவன்
பாணருக்குப் பொற்றாமரையும் களிறும் பாய்மாவும் கொடுத்தான்; விறலியருக்கு
அணியிழையும் பிடியும் வழங்கினான்; புலவருக்கு நாடும் நாட்டு வருவாயும்
காணமும் அளித்தான். அவன் எதை நினைத்தானோ அதனையே அவனைச்
சேர்ந்த உறுதிச் சுற்றத்தார் செய்தனர். அரசியல் வாழ்க்கையைச்
சிறப்பித்தற்குரிய கருவிகளெல்லாம் அவனுக்கு இருந்தன. அவனது
இல்வாழ்க்கையும் அவனுடைய தேவியின் அழகினாலும் கற்பினாலும் பிற
சிறப்புக்களாலும் விளங்கியது. அவன் நற்புதல்வர்களைப் பயந்து பிதிரர்
கடனை நிறைவேற்றினான்; விருந்தோம்பி இன்புற்றான்; கடவுளை வணங்கி
உயர்ந்தான்; அந்தணருக்கும் சான்றோருக்கும் அடங்கித் தலைமை பெற்றான்.
இவ்வளவு சிறந்த இனிய குணங்களும் சிறப்புக்களும் படைத்த அரசன்
பகைவர்திறத்தில் மிக்க கொடுமை உள்ளவனானான். தன் கீழ் அடங்கி
நில்லாத அரசரைக் கருவறுக்கும் விஷயத்தில் சிறிதும்
கண்ணோட்டமில்லாதவன்; பகைவர் அரணங்களை அழித்தும், காவல்
மரத்தை வெட்டி முரசு செய்தும் அவர்கள் நாட்டைப்பாழ்படுத்தியும், பகை
|