பக்கம் எண் :

91

     9. செல்வனென்றது 1திருவனந்தபுரத்துத் திருமாலை.

     10. பதிப்பெயரவென்னும் எச்சத்திணை மதியம் இயலுற்றாங்கு (12)
என்னும் வினையொடு முடிக்க.

     உண்ணாப் பைஞ்ஞிலம் (6) நெஞ்சுமலியுவகையராய்த் தாம் தாம்
துஞ்சும் பதிகளிலே பெயரும்படி (10) மையிருள் அகலக் (11) கோடுகூடு
மதியம் இயலுற்றாங்குத் (12) துளங்கு குடி விழுத்திணை திருத்தி (13)
எனக்கூட்டி, உண்ணாது வரங்கிடந்த மக்கட்டொகுதி வரம்பெற்று
நெங்சுமலிந்த உவகையராய்த் தாம் தாம் துஞ்சுபதிகளிலே பெயரும்படி
இருள் அகல விரிந்து கோடுகூடுதலையுடைய உவாமதியம்..................................

     இனி, துஞ்சுபதிப் பெயர (10) என்னும் எச்சத்தினை ஆண்கடன்
இறுத்த (14) என்னும் வினையொடுமுடித்து, 2வழி ஆறலை கள்வர் முதலாய
ஏதங்களின்றித் தாம்தாம் துஞ்சுபதிகளிலே பெயரும்படி தன் ஆண்மைக்
கடனை இறுத்தவென்று உரைப்பாரும் உளர்.

     13. முரசுகொண்டென்றது சிலகாலத்துப் பயன்கொள்வார் இன்மையிற்
பண்ணழிந்து கிடந்த பழமுரசினைத் தான் தோன்றி அதன் அழிவு தீர்த்து
அதன் பயன்கொண்டென்றவாறு.

     14. ஆண்கடன் இறுத்தவென்றது ஆண்மக்களாயுள்ளார் தம் கீழ்
வாழ்வாரைக் காத்தற்பொருட்டு அவர்க்கு அவர்செய்யும் கடன்களெல்லாம்
செய்துமுடித்தவென்றவாறு.

     16. விலங்கியென்றதனை விலங்கவெனத் திரிக்க.

     17. பனிவார் விண்டுவாகிய விறல்வரையென இருபெயரொட்டு.

     கூந்தலினையும் கற்பினையும் (24) நுதலினையும் (25) உந்தியினையும்
(26) உடைய தொன்னகர்ச் செல்லி (28) என மாறிக் கூட்டுக.

     28. செம்மீன் - 3அருந்துதி.

     29. நிலனதிரவெனத் திரிக்க. 31. புடையலென்றது பனந்தார்.

     புடையலினையும் கழனோன்றாளினையுமுடைய (31) நின் படை
கொள்ளுநர் (33) என மாறிக் கூட்டுக.

     33. ஈண்டுப் படை கொள்ளுநரென்றது 4படைத்தலைவரை யென்றவாறு.
நின் மார்பு (14) பனிவார் விண்டு விறல்வரையற்று (17) ; நின்றோள்கள்


     1ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன்" (சிலப். 26 : 62) என்றவிடத்து
'ஆடகமாடம் - திருவனந்தபுரம்' என்று அரும்பதவுரையாசிரியர் எழுதிய
குறிப்பு இங்கே கருதற்குரியது.

     2செங்கோல் மன்னர் நாட்டில் ஆறலை கள்வரால் வரும்
ஏதமில்லையெனக் கூறுதல் மரபு; "அத்தஞ் செல்வோ ரலறத் தாக்கிக்
கைப்பொருள் வௌவுங் களவேர்்வாழ்க்கைக் கொடியோ ரின்றவன்
கடியுடைவியன்புலம்" (
பெரும்பாண். 39 - 41)

     3அருந்ததியை அருந்துதி எனலும்ஒரு வழக்கு; "இருந்துதி வண்டன
வாலெரி முன்வலஞ் செய்திடப்பால்,
அருந்துதி காணுமளவுஞ் சிலம்ப
னருந்தழையே" (
திருச்சியிற். 300)

     4பின்னர், தானையெனப் படைவீரரைக் கூறுதலின் இங்கே படைத் தலைவரெனக் கொள்ளவேண்டும்.