எழுஉநிவந்தன்ன (20);
நீ தான் வண்டனென்பவனை அனையை (23); நின்
செல்வி செம்மீனனையள் (28); நின் மறப்படை கொள்ளுநர் புறக்கொடை
யெறியார் (33); நின் தானை (35) நகைவர்க்கு அரணமாகிப் பகைவர்க்குச் (34)
சூர்நிகழ்ந்தற்று (35); அவ்வாற்றாற் குருசில், நீ பலவும் மாட்சிமைப் பட்டனை
(36) என வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவற்குள்ள மாட்சிமையெல்லாம் எடுத்து 1உடன்
புகழ்ந்தவாறாயிற்று.
(கு
- ரை) 1 - 10. திருமாலை வழிபடுவார் செயல்.
1.
குன்றுகள் தம்மிற் கூடப்பெற்றுப் பல பொருள்களும் திரளுதலை
யுடைய கடலை ஆடையாக உடுத்த.
2.
மண்கெழு ஞாலத்து - மண் அணுக்கள் பொருந்திய பூமியில்
(பதிற்.69 : 12). ஓராங்கு - ஒருதன்மைப்பட.
3.
கைசுமந்து அலறும் பூசல் கைகளைத் தலைமேலேந்தித் தம்
குறையை எடுத்துக்கூறி வேண்டிக்கொள்ளும் ஆரவாரம். பூசல் : எழுவாய்.
மாதிரத்து - திசைகளில்.
3
- 4. பூசல் ஒலிப்ப.
5.
தெளிந்த ஓசையையுடைய உயர்ந்த திருந்திய கைத்தொழிலையுடைய
மணியை அடிப்பவர் கல்லென்னும் ஓசைபட ஆரவாரிப்ப.
6.
உண்ணாப் பைஞ்ஞிலம் பட்டினி கிடக்கும் மக்களின் தொகுதி;
பைஞ்ஞலம் பஞ்ஞிலமெனவும் வழங்கும். பனித்துறை மண்ணி - குளிர்ச்சியை
யுடைய நீர்த்துறைகளில் நீராடி.
7-9.
திருமாலின் சிறப்பு.
7.
தார் திருமகளுக்கு அடை. திரு ஞெமரகலத்து - திருமகள் பரவிய
மார்பின்கண்; "திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை" (பரி.
1 : 8)
8.
கண்பொரு திகிரி - கண்ணை வெறியோடச் செய்யும் சக்கரப்
படையையும்; "கண்பொரா வெறிக்கும்" (மதுரைக்.
665, உரை)
8-9.
நறுமணம் வீசும் பூங்கொத்துக்களையுடைய துளவமாலையை
அணிந்த திருமாலினது திருவடிகளைப் புகழ்ந்து வணங்கி.
10.
துஞ்சு பதிப்பெயர - தாம் தாம் தங்குகின்ற ஊர்களுக்கு மீட்டும்
செல்ல.
பூசல்
ஒலிப்ப, கல்லென, பைஞ்ஞிலம் பரவி உவகையராகிப் பெயர.
11.
நீலமணியின் நிறத்தைப்போன்ற கரிய இருள் நீங்கும்படி நிலாவைப்
பரப்பி.
12.
இருபக்கமும்ஒன்றுபட்ட முழுமதி வானத்திற் சஞ்சரித்தாற் போல;
கோடு கூடுமதியம்: "கோடுகொ ளொண்மதியை" (களவழி.
22). பிறையை,
"கோடுவாய் கூடாப் பிறை" (கலித். 142
: 24) எனக் கூறுதல் காண்க.
13.
துளங்கு குடி விழுத்திணை திருத்தி - வறுமையால் தளர்ந்த
குடிகளையுடைய சிறந்த குடும்பங்களைப் பண்டுபோல நிலைநிறுத்தி (பதிற்.
32; 7, 37 : 7). முரசு கொண்டு - பகைவரை வென்று களத்திலே அவரிட்ட
முரசைக் கைக் கொண்டு; முரசு கொள்ளல்: மதுரைக்.
129; அகறா. 36 : 21-2,
புறநா 25:7, 72 : 8-9, 179 : 4-5. உரையாசிரியர்
வேறு உரை கூறுவர்.
1உடன்
- ஒருங்கே.
|