பக்கம் எண் :

94

     32. அடங்காத பகைவரது மனவெழுச்சி நீங்கும்படி அவர்களை ஓட்டி.

     33. புறக்கொடை எறியார் - பகைவர் புறங்கொடுத்து ஓடும்பொழுது
அவர்மேல் ஆயுதங்களை எறியார்; இவ்வாறு எறியாது நிற்கும் இயல்பைத்
தழிஞ்சியென்னும் துறையின்பாற் படுத்துவர்; "அழிகுநர் புறக்கொடையயில்வா
ளோச்சாக், கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று" (பு. வெ. 55). மறப்படை
கொள்ளுநர் - வீரத்தையுடைய படைத்தலைவர்.

     34. நகைவர்க்கு அரணமாகி - தன்பால் அன்புடையாருக்குப் பாது
காப்பாகி; நகைவர்: பதிற். 37 : 4, 43 : 20; புறநா. 373 : 35.

     35. சூர் நிகழ்ந்தற்று - தெய்வம்பற்றி வருத்தியதுபோல்வது. தானை -
தானையிலுள்ள படைவீரர்: ஆகுபெயர், 36. பல மாண்டனை - இவ்வாறு பல
வகையால் நீ மாட்சிமைப்பட்டாய்.

     (பி - ம்.) 2. மாந்தரோங்குக. 20. நிமிர்ந்தன்ன. 34. நயவர்க்கரணம். (1)

 

32. மாண்டனை பலவே போர்மிகு குருசினீ
மாதிரம் விளக்குஞ் சால்புஞ் செம்மையும்
முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற
மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று
 5 துப்புத்துவர் போகப் பெருங்கிளை யுவப்ப
ஈத்தான் றானா விடனுடை வளனும்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லா மெண்ணி னிடுகழங்கு தபுந
கொன்னொன்று மருண்டனெ னடுபோர்க் கொற்றவ
 10 நெடுமிடல் சாயக் கொடுமிட றுமியப்
பெருமலை யானையொடு புலங்கெட விறுத்துத்
தடந்தா ணாரை படிந்திரை கவரும்
முடந்தை நெல்லின் கழையமல் கழனிப்
பிழையா விளையு ணாடகப் படுத்து
 15 வையா மாலையர் வசையுநர்க் கறுத்த
பகைவர் தேஎத் தாயினும்
சினவா யாகுத கலிரும்பூதற் பெரிதே.

     இதுவுமது. பெயர் - கழையமல் கழனி (13)

     (ப - ரை) 8. இடுகழங்கு தபுநவென்றது இடுகழங்கும் 1அலகுதபுதற்குக்
காரணமாக இருப்பனவென்றாறு.

     தபுநவென்றது பெயர்த்திரிசொல்.


     1அலகு - கணக்கு.