பக்கம் எண் :

95

     10. நெடுமிடல் - அஞ்சியின் இயற்பெயராம். கொடுமிடல் : மிடல் -
வலி; என்றது வலியாற் செய்யப்படும் போரினை.

     13. முடமாகிய கழையென இருபெயரொட்டு. நெல்லின் கழை -
நெல்லினது கழை.

     நெற்றாளை அதன்பருமையாலே மூங்கிலொடு ஒப்புமைபற்றிக் 1கழை
யென்று பெயர்கொடுத்த சிறப்பான் இதற்கு, 'கழையமல் கழனி' என்று
பெயராயிற்று.

     15. வையா மாலையரென்றது ஒன்றில் வகைபடாத இயல்பையுடைய
ரென்றவாறு.

     15-6. வசையுநர்க் கறுத்த பகைவரென்றது தங்கள் பகைவரொடு
செற்றம் கொண்டாடாது ஒழிந்திருக்க வேண்டுமளவினும் ஒழியாது அவர்களை
அக்கடப்பாடன்றி வெகுண்டிருத்தாலே தொழிலாகவுடைய பகைவரென்றவாறு.

     வசையுநர் - பகைவர்; வசையுநரென்றது பெயர்த்திரிச்சொல். இனிக்
ககரவொற்றின்றி 'வசையுநர் கறுத்த' என்பது பாடமாயின், அதனை
வினையெச்சவினைக்குறிப்புமுற்றுத் திரிசொல்லாக்கி,
வசைசொல்லுதலுடையவராய் வெகுண்ட பகைவரென்று உரைப்பாருமுளர்.

     குருசில், நீ பல குணங்களும் மாட்சிமைப்பட்டனை (1); அப் பல
குணங்களும் எண்ணப்புகின் இடுகழங்கு தபும் எல்லையவாயிருக்கும் (8);
கொற்றவ, பல குணத்தினும் ஒன்றைக் கொன்னே யான் வியந்தேன் (9);
அப்பலவற்றுள்ளும் வியப்பான குணம் யாதெனின், பகைவர் செய்த
குற்றத்திற்குத் தண்டமாக அவர் நாட்டை அகப்படுத்திக் கொண்டு (14)
வையா மாலையராகிய வசையுநர்க்கறுத்த (15) அப்பகைவரிடத்தாயினும் நீ
(16) சினவாதொழிகின்ற பொறை எமக்குப் பெரிதும் வியப்பாகா நின்றது
(17) என வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவற்குள்ள பல குணங்களையும் உடனெண்ணிப்
புகழ்ந்து அவற்றுட் பொறையுடைமையை மிகுத்துப் புகழ்ந்த வாறாயிற்று.

     (கு - ரை) 2. மாதிரம் விளக்கும் - திசைகளை விளங்கச் செய்கின்ற.
சால்பும் செம்மையும் - நற்குணங்களும் நடுவுநிலைமையும். 3. முத்தையுடைய
மருப்பினையுடைய இளைய ஆண்யானைகள் பிளிறும்படி.

     4. மிக்கு எழு கடுந்தார் துய்த்தலைச் சென்று - போரில்
வேட்கைமிக்குச் செல்லுகின்ற விரைவையுடைய தூசிப்படை பகைவர் நாட்டின்
கோடி வரையிற் சென்று.

     5. துப்பு துவர் போக - வலியின்கண் முற்றவும் உயர்ந்து நிற்க.
பெருங்கிளை உவப்ப - பெரிய சுற்றத்தார் உவக்கும்படி; கிளை என்றது
பாணர் முதலியோரை.

     6. ஈத்து ஆன்று ஆனா இடனுடை வளன் - தான் பெற்ற அரிய
பொருள்களைக் கொடுத்தலிலே அமைந்தும் குறையாத செல்வத்தின் மிகுதியும்;
இடன் - செல்வம்; "இடனில் பருவத்தும்" (குறள், 218)


     1கழையென்பதை மூங்கிலாக்கி அதனைப் போன்றநெற்றாளுக்கு
ஆகுபெயராக்கினர்.