7.
துளங்கு குடி திருத்திய - நடுக்கமுற்ற தன் குடியை மேம்படுத்திய.
மு. பதிற். 37 : 7; 4-ம் பதிகம்,
12.
8.
எல்லாம் எண்ணின் - சால்பும் செம்மையும் வளனும் வென்றியும்
ஆகிய நின் குணங்கள் எல்லாவற்றையும் எண்ணினால். இடு கழங்கு தபுந -
எண்ணுதற்கு இடப்படும் கழற்சிக்காய்கள் போதாமைக்குக் காரணமாயிருக்கும்.
கழங்கு தபுந; பதிற். 15 : 5, குறிப்புரை.
9.
கொன் ஒன்று மருண்டனென் - அக்குணங்களுள் பெரிதாகிய
ஒன்றை வியந்தேன். கொன் : பெருமையைக் குறிக்கும் இடைச்சொல்.
10.
நெடுமிடல் - அஞ்சி யென்னும் தலைவன். கொடு மிடல் துமிய -
கொடிய வலியாற் செய்யும் போர் கெடும்படி.
11.
பெரிய மலையைப் போன்ற யானைப் படையோடு பகைவர் நாடு
கெடும்படி சென்று தங்கி.
12.
தடந்தாள் நாரை - வளைந்த காலையுடைய நாரை. இரை கவரும்
(12) கழனி (13) என்க.
13.
முடந்தை நெல்லின் - கதிர்க்கனத்தின் மிகுதியால் வளைந்த
நெல்லினது (பதிற். 29 :3) நெல்லின் கழை
- நெல்லின் தாள். அமல் கழனி
- செறிந்த வயல்களையுடைய
14.
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து - தப்பாத விளைச்சலை
யுடைய நாடுகளைக் கைப்பற்றி. அகப்படுத்தல் சேரன் தொழில்.
15-6.
பகைவரது இயல்பு.
15.
வையா மாலையர் - ஒரு தன்மையிலே வைத்து
எண்ணப்படாதவராகி. வசையுநர்க் கறுத்த - தங்கள் பகைவரைக் கோபித்த.
16.
பகைவர் தேஎத்தாயினும் - நின் பகைவரிடத்தாயினும்.
17.
சினவாயாகுதல் பெரிது இறும்பூது - கோபங கொள்ளாயாயிருத்தல்
மிகவும் வியப்பைத் தருவது.
1-17.
சேரன் பல இயல்புகளால் மாட்சிமைப் பட்டானாயினும் அரசர்
மாட்டு அரிதிற் காணப்படுவதும் எல்லாவற்றினும் சிறந்ததுமாகிய பொறையைப்
பாராட்டிக் கூறினார். அரசனுக்குப் பொறை சிறப்பாதல். பதிற்.17
: 1-3;
கலித்.133 : 14; புறநா,.2
: 1-7; குறள்,151 , 579. பழ.19.
(பி
- ம்.) 14. பிழையாவிழையினாடு (2)
33. |
இறும்பூதாற்
பெரிதே கொடித்தே ரண்ணல்
வடிமணி யணைத்த பனைமரு ணோன்றாட்
கடிமரத்தாற் களிறணைத்து
நெடுநீர துறைகலங்க |
5 |
மூழ்த்திறுத்த
வியன்றனையோடு
புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்
வாண்மதி லாக வேன்மிளை யுயர்த்து
வில்லிசை யுமிழ்ந்த வைம்முள் ளம்பிற்
செவ்வா யெஃகம் வளைஇய வகழிற் |
|