பக்கம் எண் :

97

 10 காரிடி யுருமி னுரறு முரசிற்
கால்வழங் காரெயில் கருதிற்
போரெதிர் வேந்த ரொரூஉப நின்னே.

     துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் -
வரம்பில் வெள்ளம்.

     (ப - ரை) 2-3. நோன்றாட் களிறென மாறிக் கூட்டுக.

     5. வியன்றானை யென்றது பகைவர்நாட்டு எல்லையின் 1முற்பாடு
சென்றுவிட்ட தூசிப்பெரும்படையை.

     6. வரம்பில் வெள்ளமென்றது அதனோடு கூடி நாட்டுள்ளுச்
சென்றுவிடும் பேரணிப் பெரும்படையை. கரையையுடைய கடலை வரம்புடைய
வெள்ளமென்றாக்கி இதனை வரம்பில் வெள்ளமென்று கூறிய சிறப்பான்
இதற்கு, 'வரம்பில் வெள்ளம்' என்று பெயராயிற்று.

     வெள்ளமென மகரவொற்றுக் கெடாமையன் 2இருபெயரொட்டுப்
பண்புத்தொகையன்றி ஒரு பொருளாக 3இருபெயர் நின்றதாக்கிக் கொள்க.

     6-11. படைவெள்ளத்தை ஆரெயிலென்றது அரசன்றனக்கு
ஆரெயில்போல அரணாய் நிற்றலினெனக் கொள்க.

     இனிக் 4கால்வழங்காரெயிலெனக் காற்றல்லது வழங்கா ஆரெயிலென்று
பகைவர்மதிலாக்கி, அதனை வரம்பில்வெள்ளம் கொள்ளக்கருதினென்று
உரைப்பாருமுளர்.

     7. உயர்த்தென்பதனை உயர்த்தவெனத் திரித்து, அதனை எஃகம்
வளைஇய (9) என்பதனோடு முடிக்க.

     செவ்வாயெஃகம் வளைஇய அகழினையும் (9) வில்லிசையுமிழ்ந்த
அம்பாகிய வைம்முள்ளினையுமுடைய (8) ஆரெயில் (11) என மாறிக் கூட்டுக.

     செவ்வாயெஃகமென்றது 5முனைமுகத்திற் செல்லாது ஒழிந்த கூர்வேற்
கருவிகளையெனக் கொள்க.

     இனி, வாள் மதிலாகவென்று வைத்துப் பின்னை ஆரெயிலென்றது
வாண்மதிலைச் சூழ்தலையுடைய ஆராகிய எயிலினையெனக் கொள்க; ஈண்டு
ஆராவது காலாள் வழங்கிச் செல்கின்ற படையின் திரட்சி. இனி வரம்பில்
வெள்ளமானது வாள்மதிலாக வேல்மிளை உயர்த்துக் கால் வழங்கு ஆர்
எயிலாதலைக் கருதினென்றலும் ஒன்று.

     அண்ணல், இது பெரிதும் இறும்பூதாயிருந்தது (1); யாதெனின், வரம்பில்
வெள்ளம் (6) கால்வழகாரெயிலெனச் சொல்லப்பட்ட நின்படை போர்செய்யக்


     1முற்பாடு - முன்னே்; பிற்பாடு என்னும் சொல்லைப போன்றது.

     2படைவெள்ளமாகிய ஆரேயிலென்பதைக் கருதி இவ்வாறு எழுதினார்
போலும்.

     3வரம்பில் வெள்ளம், ஆரெயில் எனத் தனித்தனியே நிறுத்தி வரம்பில்
வெள்ளம் கருதின், ஆரெயில் கருதினெனக்கூட்டுதலை இங்கே கருதினார்.

     4கால் - காற்று.

     5முனைமுகம் - போர்க்களம்.