வந்தண் பழனம்” (குறுந். 178) என வருமாறு காண்க. பிறாண்டும், “அயிரைக் கொழுமீ னார்கைய................வெண்குருகு” (பதிற். 29) என்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. பாகுடிப் பார்வல், சேய்மையி னின்றே நுனித்துக் காணும் பார்வை “பரிவேட் பஞ்சா வயிரை யென்று வெளிப்படை கூறுகின்றா னாதலின், அதற்கேற்ப நீரறல் மருங்கு வழிப்படா வென்ற பெயரெச்ச மறையே பாடமாகல் வேண்டும்; இனிப் படாதென்று வினையெச்ச மறையாகிய பாடத்துக்கு நீரற்ற விடத்தில் தான் படாத படியாலே கொக்கி்ன் பரிவேட்புக் கஞ்சா அயிரை யென வுரைக்க” என்பர் பழையவுரைகாரர். பாகுடி யென்பது நாட்டு மக்கள் செலுத்திய வரி வகைகளுள் ஒன்றாக விக்கிரம சிங்கபுரக் கல்வெட்டால் (A.R.No. 297- 1916) தெரிகிறது; கூர்மை போலும் என்றார் உ. வே. சாமிநாதையர். பல் பயந் தழீஇய நாடாதலின் இதனைத் தம் வயமாக்கிக் கோடலை விரும்பிப் போதரும் பகை வேந்தர் போர் செய்து எளிதில் மேல் வாராவாறு குறுக்கே அரண்போல நின்று விலக்கிய நெடுமலை யென்றற்கு “முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை” யென்றார். 30 - 39. யாண்டு...............பலவே. உரை : பிழைப் பறியாது யாண்டு பய மழை சுரந்து - பெய்யாது பொய்த்தலின்றி யாண்டு தோறும் மழைபெய்து பயன் விளைத்தலால்; மாந்தர்க்கு நோயில் ஊழி யாக-மாந்தர்க்கு யாண்டுகள் நோயில்லாத காலமாய்க் கழிய; மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு - மண்ணுதல் செய்யாவிடத்தும் நறுமணமே கொண்டு; கார் மலர் கமழும் தாழிருங் கூந்தல் - மண்ணிய வழி முல்லை மலரின் நறுமணங் கமழும் தாழ்ந்த கரிய கூந்தலையும்; ஒரீஇயின போல - பொய்கையில் நாளத்தின் நீங்கியன போல; இரவு மலர் நின்று - இரவுப்போதிலும் மலர்ந்து நின்று; திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண் - அழகிய முகத்திடத்தே சுழலும் பூப்போன்ற பெரிய மதர்த்த குளிர்ந்த கண்ணையும்; அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து - அசைந்த காந்தள் பூத்து விளங்கும் கரையையுடைய நீர்யாற்றின் கரையிடத்தே நின்ற; வேயுறழ் பணைத்தோள் இவளோடு - மூங்கிலை நிகர்க்கும் பெரிய தோளையுமுடைய இவளுடன் கூடிநின்று; பல ஆயிர வெள்ளம் வாழிய - பல்லாயிரவெள்ளம் வாழ்வாயாக எ - று. மழை பிழைப் பறியாது பயன் சுரத்தலால் நாடு வசியும் வளனும் சிறந்து பசியும் பிணியும் முற்றவும் இல்லையாதல் ஒரு தலையாகலின், “பயமலை சுரந்து நோயில் மாந்தர்க் கூழியாக” என்றார். மாந்தர்க்கு நோயில் ஊழியாக வென மாறிக் கூட்டுக. மண்ணாக் காலத்தும் தேவியின் கூந்தல் நறுமணமே கமழ்வ தென்றற்கு “மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு” என்றார். “அரிவை கூந்தலின் நறியவு முளவோ”(குறுந். 2) என்று பிறரும் கூறுதல் காண்க. காவலன், நாடு காவற்கும் வினை செய்தற்கும் பிரிந்தவழிக் கற்புடை மகளிர் தம்மை யொப்பனை செய்துகொள்ளா ராகலின் , “மண்ணா |