| துறை : வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணமும்சொற்சீர்வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் : கயிறுகுறு முகவை. 1 - 11. சினனே..............உம்பல். உரை : சினன் காமம் கழி கண்ணோட்டம் - கையிகந்த சினமும் கையிகந்த காமமும் கையிகந்த கண்ணோட்டமும்; அச்சம் பொய்ச் சொல் அன்பு மிக வுடைமை - பகைவர்க்கு மிக அஞ்சுதலும் வாய்மையின் படாதபொய் சொல்லுதலும் தொடர் புடையார்பால் அளவிறந்த அன்புடைமையும்; தெறல் கடுமையொடு பிறவும் - மையிகந்த தண்டஞ் செய்தலும் இவைபோல்வன பிறவும்; இவ்வுலகத்து அறம் தெரி திகிரிக்கு இவ்வுலகத்தே அறமறிந்து செய்யும் அரசுமுறை நடத்தற்கு; வழியடையாகும் தீது - இடையீடாய்த் தீது விளைவிப்பனவற்றை; சேண் இகந்து - தன்னாட்டின்கண் இல்லையாக்கி; நன்று மிகப் புரிந்து - அறத்தையே மிகுதியும் செய்து; மாக்கள் - தன்னாட்டில் வாழ்பவர்; பிறர்பிறர் நலியாது - தம்முட் பிறரைத் துன்புறுத்தாமலும்; வேற்றுப்பொருள் வெஃகாது - பிறர்க் |