பக்கம் எண் :

133

“குட்டுவன்    அகப்பா    வழிய    நூறிச்    செம்பியன்,   பகற்றீ
வேட்டஞாட்பு” (நற். 14) என்று குறிக்கின்றார்.

“சுற்றம   ரொழிய வென்று கைக்கொண்டு, முற்றிய முதிர்” (தொல்.
பொ.  68) வாகிய  உழிஞைப்போ ராதலால், இவனது உழிஞை பொன்
புனை   யுழிஞை”  யெனப்படுவதாயிற்று.  பொன்னாற்  செய்யப்பட்ட
உழிஞையென்றுமாம்.  உழிஞையைக்  கொற்றா னென்றும், அது குட்ட
நட்டார் வழக்கென்றும் புறநானூற்றுரைகாரர் (புறம். 50) கூறுவர். இஃது
ஒருவகைக்  கொடி; “நெடுங்கொடி யுழிஞைப் பவர்” (புறம். 76) என்று
சான்றோர்   கூறுப.   இது   பொற்   கொற்றான்,   கருங்கொற்றான்,
முடக்கொற்றான்   எனப்  பலவகைப்படும்.  இவற்றுள்  பொற்கொற்றா
னென்பதே உழிஞை யென்று சிறப்பிக்கப்படுவது இதன் தளிரும் பூவும்
பொன்னிறமுடைய  வாதலால்,  “பொலங்குழை  யுழிஞை”  (புறம். 50)
பொன்புனை   யுழிஞை   யென   ஈண்டுக்   கூறியது   பொன்னாற்
செய்யப்பட்ட தென்றற்கு.

முழுமுத  லரணம் முற்றலும் கோடலும் செய்யும் வேந்தருள், மதில்
கொள்வோரும்   காப்போரும்   என   வரும்   இருவரில்,  முற்றிய
புறத்தோரை வென்று பெறும் வெற்றியினும், காத்துநின்ற அகத்தோரை
வென்று  பெறும்  வெற்றியே  சிறந்ததாகலின், “வெல்போர்க் குட்டுவ”
வென்றார்.

28 - 38. போர்த்து..............தாமே.

உரை : போர்த் தெறிந்த பறையால் புனல் செறுக்கு நரும்  தோல்
போர்த்துள்ள    பறையை   உழவரை   வருவித்து   மிக்கு   வரும்
புனலையடைப்பவரும்; நீர்த் தரு பூசலின் அம்பு     அழிக்குநரும்  -
நீர்   விளையாட்டின்கண்  எழும்  ஆரவாரத்தால்  அம்பும்  வில்லும்
கொண்டு    விற்பயிற்சி    செய்வாரது   ஆரவாரத்தையடக்குபவரும்;
ஒலித்தலைவிழாவின்     மலியும்   -  பேராரவாரத்தையுடைய    பல
விழாக்களிலே    திரண்டு   கூடி     மகிழும்;     யாணர்     நாடு
தண்    பணை    புதுமையினையுடைய   பகைவர்   நாட்டு   மருத
நிலங்கள்;    சீறினை    யாதலின்    -   அப்   பகைவர்பால்   நீ
சினங்கொண்டனையாதலால்; குட திசை மாய்ந்து குண முதல் தோன்றி
-   மாலையில்   மேற்றிசையின்  மறைந்து  காலையில்  கீழ்த்திசையி
லெழுந்து   தோன்றி;   பாயிருள்   அகற்றும்   -   தான்  மறைந்து
தோன்றுதற்கிடையே  நிலவுலகிற்  பரந்த  இருளைப் போக்கும்; பயம்
கெழு  பண்பின்  -  பயன்  பொருந்திய  பண்பினையுடைய; ஞாயிறு
கோடா  நன்பக லமையத்து - ஞாயிறு ஒரு பக்கமும் சாயாமல் நிற்கும்
உச்சிப்  போதாகிய நண்பகற் காலத்தே; கவலை வெண்ணரி கூஉமுறை
பயிற்றி  - பசியால் வருந்துதலையுடைய குறுநரிகள் முழலொலி போல
ஊளையிட்டுக்  கூவுதலை  முறையே  செய்ய; கழல்கண் கூகை குழறு
குரல்  பாணி - பிதுங்கியன போன்ற கண்களையுடைய கோட்டான்கள்
செய்யும்  குழறு  குரலின்  தாளத்துக்கேற்ப;  கருங்கண்  பேய் மகள்
வழங்கும் - பெரிய கண்களையுடைய பேய்மகள் கூத்தாடும்;  பெரும்