| ஈத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி ஞால நின்வழி யொழுகப் பாடல்சான்று |
| 10 | நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத் திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ குலையிழி பறியாச் சாபத்து வயவர் அம்புகளை வறியாத் தூங்குதுளங் கிருக்கை இடாஅ வேணி யியலறைக் குருசில் |
| 15 | நீர்நிலந் தீவளி விசும்போ டைந்தும் அளந்துகடை யறியினு மளப்பருங் குரையைநின் வளம்வீங்கு பெருக்க மினிதுகண் டிகுமே உண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோ |
| 20 | றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின் எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும் கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி |
| 25 | பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக் கலிழுங் கருவியொடு கையுற வணங்கி மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும் கொண்டற் றண்டளிக் கமஞ் சூன் மாமழை காரெதிர் பருவ மறப்பினும் |
| 30 | பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே. |
| துறை : இயன்மொழிவாழ்த்து. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : சீர்சால்வெள்ளி. 1 - 5. நெடுவயின்..............தலைவ.
|
உரை : நெடு வயின் ஒளிறும் மின்னுப் பரந் தாங்கு - நெடிய விசும்பின்கண் விளங்குகின்ற மின்னல் பரந்தாற்போல; புலியுறை கழித்த புலவுவாய் எஃகம் - புலித்தோலாற் செய்த உறையினின்றும் வாங்கிய புலால் நாறும் வாளை; மேவல் ஆடவர் வலனுயர்த் தேந்தி - நாளும் போரை |