பக்கம் எண் :

159

கரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி
 
5அரிய லார்கைய ரினிதுகூ டியவர்
துறைநணி மருத மேறித் தெறுமார்
எல்வளை மகளிர் தெள்விளி யிசைப்பிற்
பழனக் காவிற் பசுமயி லாலும்
பொய்கை வாயிற் புனர்பொரு புதவின்
 
10நெய்தன் மரபி னிரைகட் செறுவின்
வல்வா யுருளி கதுமென மண்ட
அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப
நல்லெருது முயலு மளறுபோகு விழுமத்து
சாகாட் டாளர் கம்பலை யல்லது
 
15பூச லறியா நன்னாட்
டியாண ரறாஅக் காமரு கவினே.
 
  

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணம் : ஒழுகுவண்ணம்.
தூக்கு : செந்தூக்கு.
பெயர் : தொடர்ந்த குவளை. 

உரை : எல் வளை மகளிர் - விளங்குகின்ற   வளையினையணிந்த
இள  மகளிர்;  தொடர்ந்த  குவளைத்  தூநெறி  அடைச்சி - இடையற
வின்றித்  தொடர்ந்து  மலரும்  குவளையின் முழுப் பூவைச்  சேர்த்து;
அலர்ந்த  ஆம்பல்  அகமடிவையர்  -  ஆம்பலின்  மலர்ந்தபூக்களை
அவற்றின்   இடையே  அகப்படத்  தொடுத்த  தழையினை   யுடுத்து;
சுரியல்  அம்  சென்னிப்  பூஞ் செய் கண்ணி அரியல் ஆர்  கையர் -
சுரிந்த   தலைமயிரிற்   பூவாற்   றொடுக்கப்பட்ட  கண்ணி  யணிந்து
கள்ளுண்ணும்  இயல்பினரான;  இனிது  கூடு இயவர் - இசை  இனிது
கூட விசைக்கும் இயவர் தங்கியிருக்கும்; துறை நணி மருதம்
    ஏறி -
நீர்த்துறைக்கண்ணிற்கும்    மருத   மரத்தின்மேல்   ஏறி;  தெறுமார்-
நெற்கதிர்களை
மேயும் புட்களை யோப்புதற்காக;தெள் விளி இசைப்பின்-
தெளிந்த தம் விளிக்குரலையெடுத்து இசைப்பா ராயின்;  பழனக் காவில்
பசு  மயில்  ஆலும்  (கம்பலையும்) - வயலருகேயுள்ள  பொழில்களில்
தங்கும் பசிய மயில்கள் அம் மகளி ரிசைக் கொப்ப  ஆடுதலா லெழும்
ஆரவாரமும்;   பொய்கை   வாயில்   புனல்     பொரு   புதவின் -
பொய்கையின் வாயிலிடத்தே யமைந்து புனலால்  தாக்கப்படும் கதவின்
கசிகால்களிற் பூக்கும்;   நெய்தல்   மரபின்   நிரைகள்   செறுவின் -
நெய்தற் பூவை யூதும் முறைமையினை யுடையவராய் நிரை    நிரையா
யிரைத்துச் செல்லும் வண்டினம் நிறைந்த