துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : வெண்கை மகளிர். உரை : வேறு விரவு கூலமொடு - வேறு வேறாக விரவிய பல கூலங்களுடன்; குருதி வேட்ட மயிர் புதை மாக்கண் - குருதிப் பலி யூட்டிய வட்டமான மயிர் மறையும்படியாகப் போர்த்த கரிய கண் ணமைந்த முழவானது; கடிய கழற - சேணிடத்தேயிருந்து கேட்டார்க்கு அச்ச முண்டாகுமாறு முழங்க; அமர் கோள் நேர் இகந்து - பகைவர் போரில் நேர்படுதலை யஞ்சாது முன்னேறிச் சென்று; ஆர் எயில் கடக்கும் பெரும் பல் யானைக் குட்டுவன் அவரது அரிய மதிலைக் கடக்கும் பெரிய பல் யானைகளையுடைய குட்டுவனுடைய; வரம்பில் தானை பரவா வூங்கு - எல்லையில்லாத தானைகள் சென்று பரந்தழிப்பதன் முன்னே; அவலெறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி - அவலிடித்த உலக்கையை வாழைமரத்தில் சார்த்தி விட்டு; வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் - வளையணிந்த இளமகளிர் வள்ளையினது பூவைப் பறிக்கும்; முடந்தை நெல்லின் விளை வயல் - விளைந்து தலைசாய்ந்து கிடக்கும் நெல் வயலிடத்தே; பரந்த தடந்தாள் நாரை இரிய - பரந்து நின்று மேயும் பெரிய கால்களையுடைய நாரைகள் அவ் வயல்களினின்றும் நீங்க; அயிரைக் கொழுமீன் ஆர்கைய - அயிரையாகிய கொழுவிய மீன்களையுண்பவையான கொக்கு முதலிய குருகுகள்; மரந்தொறும் குழா அலின் - வயலருகே நிற்கும் மரங்கள்தோறும் கூடியிருத்தலால்; வெண்கை மகளிர் வெண்குருகு ஓப்பும் - வளை யணியாத மிக்க இளம் பெண்கள் வெள்ளிய சிறு பறவைகளை யோப்பித் திரியும்; அழியா விழவின் - இடையறாத விழாக்களையுடைமையால்; இழியாத் திவவின் வயிரிய மாக்கள் குற்றமில்லாத திவவு யாழினையுடைய வயிரியர்; பண்ணமைத் தெழீஇ - அவ் வியாழைப் |