17

உரையெழுதிப்போந்த      ஆசிரியப்பெருமக்கள்    யாவரும்   இக்
காலவேறுபாடுகளில்  ஓரளவு சிக்குண்டவர்களே என்னும் உண்மையை
யுளத்துட்    கொண்டு     பதிற்றுப்பத்தின்    பழைய   வுரையினை
நன்காராய்ந்து   திரு.   பிள்ளையவர்கள்   இப்புதிய  விரிவுரையினை
இயற்றியுள்ள திறம் இவ்வுரை முழுதையும்  கருத்தூன்றிப் படிப்பார்க்கு
இனிது விளங்கும்.

இனி,     இப்பழையவுரையினை    யடிப்படையாகக்    கொண்டு
இக்காலத்தார்    எழுதிய    குறிப்புக்கள்    சில,    பதிற்றுப்பத்துப்
பாடல்களுக்கும்   பழையவுரைக்கும்  மாறாக  நூல்பயிலும்   மாணவர்
உள்ளத்தை மருட்டும் நிலையில் உள்ளன.

தம்முடன்     போர் செய்வார் தோல்வியுற்று நிலத்தே  விழும்படி
வாளாற்  பொருது அவர்தம் நாட்டைக் கவர்ந்துகொள்ளும் பேராற்றல்
படைத்த  வீரர்களை  யுடைய  பகைவேந்தர்  தலைநடுங்கி  வணங்க
அவர்தம்   காவல்மரமாகிய   கடம்பினை   வேந்தர்  பெருமானாகிய
நெடுஞ்சேரலாதன்     அடியோடு     வெட்டி      வீழ்த்துகின்றான்.
அம்மன்னனது  போர்த்திறத்தை  நேரிற்கண்டு  மகிழ்ந்த   குமட்டூர்க்
கண்ணனார்   என்னும்   புலவர்   “வயவர்   வீழவாளரின்  மயக்கி,
இடங்கவர்   கடும்பின்  அரசுதலை  பனிப்பக்,  கடம்புமுதல்  தடிந்த
கடுஞ்சின வேந்தே” எனச் சேரலாதனைப் பாராட்டிப்  போற்றுகின்றார்.
இங்கே   சேரலாதனுக்குப்   பகைவராகிய   கடம்பரது   பேராற்றலை
மிகுத்துக் கூறும் வாயிலாக அக்கடம்பரை வென்றடக்கிய  சேரலாதனது
பேராற்றலைப்  புலப்படுத்துதல்  புலவர்  கருத்தாகலின்  ‘வயவர் வீழ
வாளரில்  மயக்கி  இடங்கவர்  கடும்பின் அரசு என் அக் கடம்பரைச்
சிறப்பித்தார். இங்ஙனம் பகைவரை மாட்சிமைப்படுத்திக் கூறுமுகத்தால்
அவர்களை  வென்றடக்கிய  தம்  வேந்தனது  வெற்றியை  விளக்கும்
முறை,

“நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்”           (49)

எனவும்,

“நிலந்தப விடூஉம் ஏணிப்புலம் படர்ந்து
படுகண் முரசம் நடுவட் சிலைப்பத்
தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்
ஏவல் வியங்கொண்டு இளையரோ டெழுதரும்
ஒல்லார்”                                  
(54)

எனவும்     வரும்   தொடர்களால்  நன்கு  விளங்கும். இம்மரபினை
யுளத்துட்  கொண்டு  ‘இடங்கவர்  கடும்பின் அரசு’ என்ற தொடர்க்கு
“மாற்றாரது   இடத்தைக்   கவர்ந்துகொள்ள   வல்ல  ஆற்றல் மிக்க
வீரத்தினையுடைய