பக்கம் எண் :

178

அரணாகவும்,     சோழர்க்குக்   கிழக்கிற்  கடலரணாகவும்,  ஏனைப்
பகுதிகளில்  காடு  அரணாகவும் இருந்தமையின், “கடலவும் காட்டவும்
அரண்”  என்றும்,  கடலும்  காடும் பேரரண்களாக விருப்பவும், அவ்
வாற்றாலும்  மனத்திண்மை பெறாது நெஞ்சு கலங்கி யஞ்சின ரென்பது
தோன்ற, “அரண் வலியார் நடுங்க” என்றும் கூறினார்.
  

சேரனது     போர்வன்மை குறித்துரைக்கும் முரசு    முழக்கினை,
“முரண்மிகு  கடுங்குரல்”  என்றும், அம் முழக்கம் வானத்தே  சென்று
எதிரொலித்   ததிர்வது   விளங்க,   “விசும்படைபு  அதிர”  என்றும்
விதந்தோதினார்.  இது  முரசுறை  கடவுட்குப்  பலியிடுவோர் செய்யும்
முரசு முழக்காகும்.
  

முரசுறை     கடவுட்குப் பலியிட்டு மந்திரம் கூறுவோன் அதனை
யோதுதற்குரிய   உயர்வுடைய  னாதலின்  அவனை  “உயர்ந்தோன்”
என்றும்,   முரசுறையும்   கடவுளின்  வெற்றி  பயக்கும்  சிறப்பினை,
“அருந்திறல்   மரபின்  கடவுள்”  என்றும்,  அவ்  வழிபாட்டிடத்தே
யோதப்படும்  மந்திரம்,  மானதம், மந்தம், உரை யென்ற  மூவகையுள்
உரையால்  முழக்கி  யோதப்படும்  வகையினைச்  சார்ந்த  தாதலின்,
“முழங்கு  மந்திரம்”  என்றும்,  அம்  மந்திர முழக்கம், கேட்கும் வீர
ருள்ளத்தே   பகைவர்பால்  மிக்க  சினத்தை  யெழுப்பும்  இயல்பிற்
றென்பார்  போல, “கடுஞ்சினங் கடாஅய் முழங்கும் மந்திர” மென்றும்
கூறினார்.   மந்திரத்  தென்புழி  ஆனுருபு  தொக்கது.   மந்திரத்தால்
கடவுட்குப்  பரவுக்  கடனாற்றும்  உயர்ந்தோன்,  அக் கடவுட்காக்கிய
பலியினைப்  பிறர்  பெறற்காகா  தென்பார்,  “அரும்பெறற் பிண்டம்”
என்றும,்   அது  குருதி  விரவிக்  கள்ளுடனே  கொடுக்கப் படுமாறு
தோன்ற,   “நெய்த்தோர்   தூஉய  நிறைமகி  ழிரும்பலி”  யென்றும்,
அதனால்,   பேய்மகள்   அதனைப்   பெறமாட்டாமையின்   அஞ்சி
நடுங்கின  ளென்பார்,  “கருங்கட்  பேய்மகள்  கைபுடையூஉ  நடுங்க”
வென்றும்,  அப்  பலியினை முரசுறை கடவுள் என்று  கொண்டதற்குச்
சான்றாக,  எறும்பும்  அதனை  மூசா  தென்றும் கூறினார். இஃதொரு
வியப்பாகலின், “இறும்பூது மரபின்” என்றார். பேய் மகளும்  எறும்பும்
பெறலாகாப்   பெருமை   யுடைத்தாயினும்,  இப்  பலி  காக்கைக்கும்
பருந்திற்கும் இடப்படும் என்பார், “கருங்கட் காக்கையொடு  பருந்திருந்
தார”   என்றார்.   காக்கையை   ஒடுக்கொடுத்   துயர்த்தியது,  அது
பருந்துபோல்  தனித்துண்ணாது  தன்னினத்தை  யழைத்து அவற்றோ
டிருந்துண்ணும்  உயர்  செய்கை  யுடையதாதலால்  என  அறிக. இப்
பகுதிக்கண்,   “முழங்கு   மந்திரமென்றது,  முழங்க  வுச்சரிக்கப்படும்
மந்திர   மென்றவா”  றென்றும்,  “மந்திரத்தானென  வுருபு  விரித்து
அதனைப்   பேணிய   ரென்பதனோடு  முடிக்க”  வென்றும்,  “கடவு
ளென்றது   முரசுறை  கடவுளை”  யென்றும்,  “கருங்கட்  பேய்மகள்
கைபுடையூஉ   நடுங்க,  உயர்ந்தோனேந்திய  அரும்பெறற்  பிண்டம்,
எறும்பு   மூசா   விறும்பூது  மரபின்,  நெய்த்தோர்  தூய  நிறைமகி
ழிரும்பலி,  கருங்கட்  காக்கையொடு பருந்திருந் தார வெனக் கூட்டுக”
வென்றும்,  “இறும்பூது  மரபிற்  பலியென மாறிக் கூட்டுக” வென்றும்,
“பேய்களும்    எறும்புகளும்    அஞ்சிச்    செல்லாத   பலிகளைக்
காக்கையொடு  பருந்திருந் தார வென்றது, அம் முரசுறை கடவுள் தன்
னாணையால்  தன்  பலிகளை  மேல்  தன்னருளாலே போர் வென்றி
விளைவது  அறிவித்தற்கு நிமித்தமாகக் காக்கையும் பருந்தும்  இருந்து
ஆர   வென்றவா”   றென்றும்,  “இவ்விடத்துக்குப்  பிறவாறு  கூட்டி
யுரைப்பாரு