18

பகைவேந்தர்”     எனப்   பொருள்   கூறுவதே நேரிய முறையாகும்.
இதற்கு மாறாக இத்தொடர்க்கு “தனக்குரிய இடத்தைக் கவர்ந்த மந்திரி
முதலிய   சுற்றத்தையுடைய   பகையரசர்”   எனப்  பொருள்  கூறிய
இக்காலத்தார்  குறிப்புரை,  நெடுஞ்சேரலாதனது  நாட்டைக்   கடம்பர்
முதன்  முதல்  படையெடுத்துப்  பிடித்தன ரெனவும்,  அதன்பின்னரே
சேரலாதன்  அவரோடு  போர்செய்து  வென்றனன்  எனவும் பொருள்
கொள்ளும் நிலையில் அமைந்துளது. இமைய மளவும்   படையெடுத்துச்
சென்று,   ஆரியரை   வணக்கிய   பெரும்புகழ்  படைத்த   வேந்தர்
பெருமானாகிய   சேரலாதன்,   கடம்பர்   என்பார்    தந்   நாட்டிற்
படையெடுத்து   இடங்களைக்  கவர்ந்து  கொள்ளும்படி   கருத்தின்றி
யிருந்தான்  எனத் தவறான பொருள்படும்படி எழுதப்பட்ட  இக் காலக்
குறிப்புரையின் பொருந்தாமையினை யுணர்ந்த   திரு. பிள்ளையவர்கள்,
வரலாற்றுமுறைக்கு மாறுபடாத  வகையில் இத்தொடர்க்கு உரை கூறிய
திறம் (பக். 12-13) வியக்கத்தக்கதாம்.

திரு. பிள்ளையவர்கள் தமது விரிவுரையில் பாடல்தோறும் பதசாரம்
கூறும்    முறை    பரிமேலழகர்,     நச்சினார்க்கினியர்    என்னும்
பழையவுரையாசிரியர்களின்  உரைநயங்களை யெல்லாம் நினைவு கூரச்
செய்கின்றது.      பாட்டின்       பெயர்க்காரணங்      கூறுங்கால்
பழையவுரையாசிரியர் கருத்தைப் பின்பற்றி இவர்கள்  கூறும் விளக்கம்
மிகவும் தெளிவுடையதாகும்.

16-ஆம்     பாடல்,  துயிலின்பாயல் என்னும்  பெயருடையதாகும்.
இப்பாடலில்   நெடுஞ்சேரலாதனது  மார்பினை  அவனை  விரும்பிய
மகளிர்க்குப்  பாய  லெனச்  சிறப்பித்தமையால்  இதற்குத்   துயிலின்
பாயலென்று   பெயராயிற்று   எனப்  பழையவுரையாசிரியர்  கூறினர்.
‘திருஞெமரகலத்துத்    துயிலின்    பாயல்’    என்பதற்குத்    திரு.
பிள்ளையவர்கள்   கூறிய   மற்றொரு  நயம்  பெரிதும்   சுவைதருவ
தொன்றாம்.   நெடுஞ்சேரலாதனது   மார்பு  திருமகள்   வீற்றிருக்கும்
சிறப்புடைய     தென்பது     ‘திருஞெம    ரகலம்’    என்பதனால்
விளக்கப்பெற்றது.   அங்ஙனம்   திருமகள்   விரும்பி   வீற்றிருக்கும்
சேரலாதனது  மார்பினை  அவன்  காதன்மகளிர்க்குப்  பாயல்  எனப்
புலவர்  சிறப்பிக்கின்றார்.  பிறளொருத்தி  தன் கணவன்  மார்பினைத்
தோய்ந்தவழி   அதனை  வெறுத்துப்  புலந்து  போதலே  குலமகளிர்
இயல்பு.  சேரலாதனை  விரும்பிய மகளிர், அவன் மார்பில்  திருமகள்
என்னும்   மற்றொருத்தி   பிரியாதுறைதலைக்  கண்டும்   அவனுடன்
புலவாது   அத்திருமகளின்   இருப்பு  ஆள்வினையிற்   சிறந்த  தம்
கணவனாகிய சேரலாதனுக்கு அழகென்று