களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம், கமழ்குரற் றுழாய், கழையமல் கழனி, வரம்பில் வெள்ளம், ஒண்பொறிக் கழற்கால், மெய்யாடு பறந்தலை, வாள் மயங்கு கடுந்தார், வலம்படு வென்றி, பரிசிலர் வெறுக்கை, ஏவல் வியன்பணை, நாடுகா ணவிர்சுடர். இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில் : நாற்பது நூறாயிரம் பொன ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகங் கொடுத்தான் அக் கோ. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். |