வென்பது, முழங்கியெனத் திரிந்தது. அதன் முழக்கோசையுடனே சேரலன், ஊக்கம் கிளர்ந்தெழுந்து பொரு மாற்றினை, “செருமிக்கு” என்றார.் ஊக்கம் கிளர வுண்டாகும் செருவேட்கை செருவெனப்பட்டது. செரு மிக்குச் சென்று பொருதலின் பயனாகப் பகைவருடைய அரணங்கள் வலி யழிகின்றன வென்பார், “அடங்கார் ஆரரண் வாட” என்றார். பசுமை வற்றிய பைங்கொடியை வாடிய கொடி யென்றாற்போல, கைப்பற்றுதற்கரிய காவலும் வலியு மழிந்த அரணங்களை, “ஆரரண் வாட” என்றார். “வீயாது நின்ற உயிரில்லை” (புறம். 363) என்பதனால் சாக்காடு பயக்கும் கூற்றுவனை வெல்லுதல் எவ்வுயிர்க்கும் அரிதென்பது பெற்றாம். அவ்வாறு பகைவர் வேறற் கருமைபற்றி, இச் சேரமானைக் “காலன் அனைய முன்ப” என்றார். “கால முன்ப” (புறம். 23) என்றார் பிறரும். காலன் அனைய முன்ப, துப்புத்துறை போகிய கடுஞ்சின முன்ப என இயையும். துப்பு, வலி, பகையும் போருமாம் வில்லும் வாளும் வேலும் கொண்டு, தேர் குதிரை களிறுகளை யூர்ந்து மறவரைத் தக்காங்குச் செலுத்திப் பொருந் திறம் பலவாதலின், “துப்புத்துறை,” யென்றும், அத் துறை போகக் கற்றுச் செய்யும் போரி லெல்லாம் வெற்றியே யெய்தினமையால், “துப்புத் துறை போகிய” என்றும் கூறினார். வெப்புடைத் தும்பைப் போர்க்கண், ஏவல் வியன்பணையானது, தெவ்வர் கடிமுனை யலற, உருமென அதிர்பட்டு முழங்க; அடங்கார் அரண்வாடச் செல்லும் காலன் அனைய கடுஞ்சின முன்ப, துப்புத்துறை போகிய முன்ப என இயையும். 9 - 17. வாலதின்...........புகன்றே. உரை : அலந்தலை வேலத்து உலவை யஞ்சினை - சிதைந்த தலையையுடைய வேல மரத்தின் உலர்ந்த கிளைகளில்; பொறித்த போலும் புள்ளி எருத்தின் - பொறித்தது போன்ற புள்ளிகளையுடைய கழுத்தையும்; புன்புறப் புறவின் கணநிரை யலற - புல்லிய முதுகையுமுடைய புறாக் கூட்டம் கண்டு அஞ்சித் தம் ஒழுங்கு சிதைந்து கெட ; வாலிதின் நூலின் இழையா - வெண்மையான நூலாக இழைக்கப்படாத; நுண் மயிர் இழைய - நுண்ணிய மயிர்போன்ற இழையையுடைய; சிலம்பி கோலிய அலங்கற் போர்வையின் - சிலந்திப் பூச்சி தொடுத்த அசைகின்ற வலையைப் போல; இலங்கு மணி மிடைந்த பசும்பொற் படலத்து விளங்குகின்ற மணிகள் விளிம்பிலே கோத்த பசிய பொற்றகட்டாற் செய்த கூட்டின் புறத்தே; அவிர் இழை தைஇ - விளங்குகின்ற இழையணிந்து; மின் உமிழ்பு இலங்க - ஒளி சொரிந்து விளங்குமாறு; சீர் மிகு முத்தம் தைஇய - சிறப்பு மிக்க முத்துவடம் கோத்த ; நார்முடிச் சேரல் - நாரால் தொடுக்கப்பட்ட முடியணிந்த சேரமானே எ - று. இலை முற்றும் உதிர்ந்து வறிது நிற்கும் வேலமரம் என்றற்கு, “அலந்தலை வேலத் துலவை யஞ்சினை” யென்றார். அதன் கொம்பிடத்தே சிலந்திப்பூச்சி தொடுத்திருக்கும் வலைக்கண்ணுள்ள இழை பருத்தி நூலிழை |