பக்கம் எண் :

223

னாணையானே   நிரப்பி  யென்றவா”  றென்பர்.  வென்றி  யெய்திய
வேந்தன் மகிழ்ச்சியால் தானைத் தலைவருடன்  கூடித் தேர்த்தட்டிலே
நின்று   குரவைக்   கூத்தயர்தல்   மரபாதலால்,   “வென்றி  யாடிய
தொடித்தோள் மீகை” யென்றார் இதனை முன்தேர்க் குரவை யென்ப ;
“தேரோர், வென்ற  கோமான்  முன்தேர்க்  குரவை”  (புறத். 21) என
ஆசிரியர் தொல்காப்பியர் கூறுதல் காண்க.இவ்வாறு வெற்றிக்காலத்து
வேந்தா   குரவையாடுதல்   மரபேயன்றி,  ஏனை  விழாக்காலங்களில்
ஆடுதல் இல்லையென வறிக. மீ கை யென்பதற்குப்  பழையவுரைகாரர்,
“மேலெடுத்தகை”    யென்றும்,    “வென்றி    யாடிய    வென்னும்
பெயரெச்சத்திற்கு   மீ  கை  யென்னும்  பெயரினை  அவன்  தான்
வென்றியாடுதற்குக்  கருவியாகிய  கை  யெனக் கருவிப் பெயராக்குக”
என்றும்   கூறுவர்.   விறலியை   யாற்றுப்படுப்போன்  கூற்றாதலின்,
அவனது  கொடைச்  சிறப்புந்  தோன்ற,  சேரலன் கையை, “மீ கை”
யெனச் சிறந்தெடுத்துக் கூறினான்.
  

பொன் விளையும் கொண்கானநாட்டுக் குரிய னாதலின், நன்னனை,
“பொன்னங்  கண்ணிப்  பொலந்தேர்  நன்னன்”  என்றார் ; பிறரும்,
“பொன்படு   கொண்காள   நன்னன்”  (நற்.  391)  என்பது காண்க.
நன்னனது  காவல்மரம்  வாகை  யென்பதை  இப்பத்தின்  பதிகமும்,
“நன்னனை,  நிலைச்செருவினாற்றலை  யறுத்தவன், பொன்படு வாகை
முழுமுத   றடிந்து”   என்று   கூறுவதும்   ஈண்டு  நோக்கத்தக்கது.
பொன்னிறங்  கொண்டு  விளங்குதலின்,  வாகைப்பூவைச்  “சுடர் வீ
வாகை” யென்றார். இவ்வாறே விளங்கும் வேங்கைப் பூவையும், “சுடர்
வீ வேங்கை” (பதிற். 41) எனப் பிறரும் கூறுப. கடி, காவல், தார்,“தார்
தாங்கிச்  செல்வது  தானை” (குறள்.  767)  என்றாற் போலத் தூசிப்
படைமேற்று.  முந்துற்றுச் செல்லும் தூசிப்படையொடு போகாது அகப்
படையின்  நடுவே  சேறல்  வேந்தர்க் கியல்பாயினும், இந் நார்முடிச்
சேரல்  தூசிப்படைக்கு  முன்னே  சென்று செரு மேம்படும் செய்கை
யுடையனென்றதற்கு,  “தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்” என்றார்.
தார்க்கு முந்துறச் சென்று மிகுதற்கு ஏது அவனது மிக்குற்ற வலியேயா
மென்பார்,   “தார்மிகு  மைந்”  தென்றா  ரென  வறிக. “பொன்னங்
கண்ணியும்    பொலந்தேரும்   நன்னற்   கடையாக்குக”  வென்பர்
பழையவுரைகாரர்.  தடிந்த  வென்னும்  பெயரெச்சம்  அதற்  கேதுப்
பெயராகிய மைந்  தென்பதனோடு  முடிந்தது ; சேரல் என்பதனோடு
முடித்துத் தடிந்த சேரல், நார்முடிச் சேரல் என இயைப்பினுமாம்.
  

இது,     பூமலைந்துரைஇ,  அருஞ்சமம்  கொன்று,  புறம் பெற்று,
மன்பதை   நிரப்பி,   வென்றி   யாடிய  மீ  கையையும்,  திருஞெம
ரகலத்தையும்,  நன்னன்  வாகைக்  கடிமுதல்  தடிந்த மைந்தினையும்
நார்முடியினையுமுடைய சேரல் என இயையும்.
  

17 - 20. புன்கா லுன்னம் ......... நேரியோனே.  

உரை :  தெண் கள் வறிது கூட்டு அரியல் - தெளிந்த  கள்ளிலே
களிப்பு இறப்ப மிகாவாறு கலத்தற்குரிய பொருள்களைச் சிறிதே கலந்து
வடிக்கப்பட்ட  கள்  ;  இரவலர்த்  தடுப்ப  - தன்னையுண்டு மகிழும்
இரவலர்களை  வேறிடம்  செல்லவிடாது  தடுத்து  நிறுத்த ; தான் தர
வுண்ட