ஆசிரியர் பரணர் பாடிய ஐந்தாம் பத்து பதிகம் |
| வடவ ருட்கும் வான்றோய் வெல்கொடிக் குடவர் கோமா னெடுஞ்சேர லாதற்குச் சோழன் மணக் கிள்ளி யீன்றமகன் கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் |
5 | கானவில் கானங் கணையிற் போகி ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை இன்ப லருவிக் கங்கை மண்ணி இனந்தெரி பல்லான் கன்றொடு கொண்டு மாறா வல்வி லிடும்பிற் புறத்திறுத் |
10 | துறுபுலி யன்ன வயவர் வீழச் சிறுகுர னெய்தல் வியலூர் நூறி அக்கரை நண்ணிக் கொடுகூ ரெறிந்து பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின் முழாரை 1முழுமுத றுமியப் பண்ணி |
15 | வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர் பல்லிருங் கூந்தன் முரற்சியாற் குஞ்சர வொழுகை பூட்டி வெந்திறல் ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து நிலைச் செருவி னாற்றலை யறுத்துக் கெடலருந் தானையொடு |
கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவனைக் கரணமமைந்த காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப் பாட்டு. 1. ‘முரரை முழுமுதல்’ என்ற பாடம் அச்சுப் பிரதியிற் காணப்படுகிறது |